News June 22, 2024
இதை அடக்கினால் சிறுநீரகக் கல் உருவாக வாய்ப்பு

கிட்னி ஸ்டோன் எனப்படும் சிறுநீரகக் கல்லால், சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை பாதிக்கப்படுகின்றனர். இதற்கு பல்வேறு காரணங்கள் கூறப்பட்டாலும், மிக முக்கியக் காரணமாக சிறுநீர் வருகையில் அதை வெளியேற்றாமல் அடக்கி வைப்பது கூறப்படுகிறது. சிறுநீரை அடக்கி வைக்கையில், அதில் இருக்கும் உப்பு சிறுநீரகத்தில் படிந்து கற்களாக மாறுவதாகவும், பின்னர் வலியை ஏற்படுத்தும் என மருத்துவத்தில் கூறப்பட்டுள்ளது.
Similar News
News September 16, 2025
‘தண்டகாரண்யம்’ படத்திற்கு திருமாவளவன் பாராட்டு

‘தண்டகாரண்யம்’ படத்தை முற்போக்கு சிந்தனை உள்ள அனைவரும் வரவேற்க வேண்டும் என திருமாவளவன் தெரிவித்துள்ளார். மக்கள் நக்சல்வாதிகள் பக்கம் தான் நிற்பார்கள், நக்சல்கள் மக்கள் பக்கம் நிற்கிறார்கள், அதிகார வர்க்கம் பக்கம் ஒருபோதும் நிற்கமாட்டார்கள் என்பதை இப்படம் உணர்த்துவதாக கூறியுள்ளார். மேலும் நக்சல்வாதிகளை மக்களுக்கான போராளிகள் என்றும் பாதுகாவலர்கள் எனவும் திருமாவளவன் குறிப்பிட்டார்.
News September 16, 2025
அதிமுக தோற்றால் நான் பொறுப்பல்ல: TTV

2026 தேர்தலில் அதிமுகவின் வாக்கு 10% குறையும் என TTV தெரிவித்துள்ளார். MLA-க்களை பிரித்து சென்று ஆட்சியை கவிழ்க்க பார்த்தார்கள் என EPS நேற்று பேசினார். இதை மறுத்துள்ள TTV, 18 MLA-க்களும் EPS-ஐ மாற்ற வேண்டும் என்று மட்டுமே கவர்னரிடம் கோரிக்கை வைத்ததாகவும், ஆனால் அவர் ஆட்சியை தக்க வைக்க வாக்களித்தவர்களையே நீக்கியதாக கூறியுள்ளார். தேர்தலில் அதிமுக தோற்றால் அதற்கு தான் பொறுப்பல்ல என்று TTV கூறினார்.
News September 16, 2025
பிசினஸில் களமிறங்கிய கங்குலி

இந்திய அணியின் முன்னாள் கேப்டன் கங்குலி, ஆடை பிராண்ட் பிசினஸை தொடங்கியுள்ளார். மிந்த்ராவுடன் இணைந்து, தனது புதிய பிராண்டான Souragya-ஐ அவர் அறிமுகப்படுத்தியுள்ளார். துர்கா பூஜையை முன்னிட்டு, இந்த புதிய அவதாரத்தை அவர் எடுத்துள்ளார். மேற்கு வங்கத்தின் தனித்துவமான டிசைன்களை பிரபலப்படுத்துவதை நோக்கமாக கொண்டு அவர் இதை முன்னெடுத்துள்ளதாக தெரிவித்துள்ளார்.