News January 24, 2025
துணை நடிகர் ஜெயசீலன் மரணம்

உடல்நலக்குறைவால் துணை நடிகர் ஜெயசீலன் (40) மரணமடைந்தார். மஞ்சள் காமாலை பாதிப்பால் சென்னை ஸ்டான்லி ஹாஸ்பிட்டலில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி உயிர்பிரிந்தது. சென்னை புதுவண்ணாரப்பேட்டையில் திருமணம் செய்து கொள்ளாமல் வசித்த இவர், புதுப்பேட்டை, தெறி, விக்ரம் வேதா உள்ளிட்ட பல படங்களில் துணை நடிகராக நடித்துள்ளார். அவரது மறைவுக்கு திரைத்துறையினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
Similar News
News February 24, 2026
வீட்டில் லட்சுமி கடாட்சம் நிறைய இப்படி விளக்கேற்றுங்கள்!

சூரியன் மறைவதற்கு 30 நிமிடங்களுக்கு முன் விளக்கு ஏற்றுவது நல்லது. லட்சுமி தேவிக்காக விளக்கை வடக்கு திசையில் ஏற்றி வைக்க வேண்டும். அங்கே செருப்பு இருக்கக் கூடாது. விளக்கை நன்றாக சுத்தம் செய்து விட்டே விளக்கு ஏற்ற வேண்டும். விளக்கில் கரி படிந்திருந்தால், அதை மாற்ற வேண்டும். விளக்கு ஏற்றியவுடன் கதவை மூடக்கூடாது. வீட்டிற்குள் வரும் நல்ல சக்திகள் வெளியே தங்கிவிடும் என்பது ஐதீகம். SHARE IT.
News February 24, 2026
‘அதிமுக ஆட்சிக்கு வருவதில் விஜய்க்கு ஆட்சேபனை இல்லை’

விஜய்யின் திமுக எதிர்ப்பு தங்களுக்கு சாதகமாக இருப்பதாக அதிமுக துணை பொதுச் செயலாளர் கே.பி.முனுசாமி பேசியுள்ளார். விஜய்க்கு தொழில் ரீதியாக பிரச்னை வந்தபோது எடப்பாடி உதவி செய்ததால் அதிமுகவை பாசமாக பார்ப்பதாகவும், திமுக ஆட்சியில் அவர் கடுமையாக பாதிக்கப்பட்டதால் அவர்களை எதிர்ப்பதாகவும் தெரிவித்தார். மேலும், இதனால் அதிமுக ஆட்சிக்கு வருவதில் விஜய்க்கு எந்த ஆட்சேபனையும் இல்லை என்று தெரிவித்தார்.
News February 24, 2026
FLASH: தங்கம் விலையில் மீண்டும் மிகப்பெரிய மாற்றம்

சர்வதேச சந்தையில் தங்கம் விலை மீண்டும் ஜெட் வேகத்தில் உயர்ந்து வருகிறது. தற்போதைய நிலவரப்படி 1 அவுன்ஸ்(28g) $122 (இந்திய மதிப்பில் ₹11,100) உயர்ந்து $5,227 ஆக உள்ளது. அதேபோல் வெள்ளி 1 அவுன்ஸ் $3 (₹272) உயர்ந்து $87-க்கு விற்பனையாகிறது. இதே நிலை நீடித்தால், இந்திய சந்தையில் இன்று தங்கம் விலை கணிசமாக உயரும். கடந்த 3 நாள்களில் மட்டும் சவரனுக்கு ₹3,520 உயர்ந்தது கவனிக்கத்தக்கது.


