News April 22, 2024
சிறிய படங்களுக்கு ஆதரவு அளியுங்கள்

சிறிய படங்கள் வந்தால்தான் சினிமாத் துறை நன்றாக இருக்கும் என நடிகரும், கார்த்திக் சுப்புராஜின் தந்தையுமான கஜராஜ் கூறியுள்ளார். அதுபோல நல்ல கதைக்களம் உள்ள படங்களுக்கு ஆதரவு கொடுக்குமாறுக் கேட்டுக்கொண்ட அவர், மகன் பட்ட கஷ்டம் தனக்கு தெரியும், அவரும் அப்படிப் படங்களை எடுத்துத்தான் வந்திருப்பதாக கூறினார். மேலும், சிறிய படங்களே சினிமா துறையில் வேலை வாய்ப்புகளை அதிகமாக்கும் எனவும் அவர் தெரிவித்தார்.
Similar News
News January 22, 2026
நாங்கள் அரசியல் கட்சி அல்ல: OPS

தேர்தல் நெருங்கிவிட்ட நிலையில், OPS இன்னும் தனது நிலைப்பாட்டை தெரிவிக்காமல் உள்ளார். இதனால் அவர் பக்கம் நின்ற முக்கிய தலைவர்களான மனோஜ் பாண்டியன், வைத்திலிங்கம், ஜேசிடி பிரபாகர் ஆகியோர் மாற்று கட்சியில் இணைந்துவிட்டனர். இந்நிலையில் அரசியலில் சரியான முடிவு எடுக்காததால்தான் நிர்வாகிகள் கட்சியை விட்டு வெளியேறுகின்றனரா? என செய்தியாளர்கள் கேட்க, நாங்கள் அரசியல் கட்சி அல்ல என OPS பதில் அளித்தார்.
News January 22, 2026
ஜன நாயகன் ரிலீஸில் அடுத்த சிக்கல்

சென்சார் சிக்கலில் உள்ள ‘ஜன நாயகன்’ படத்தை முன்னதாகவே அமேசான் பிரைம் வாங்கியிருந்தது. ஆனால், பட ரிலீஸ் தேதி முடிவாகாததால் தங்களுக்கு ஏற்பட்டுள்ள நஷ்டத்திற்கு உரிய இழப்பீடு வழங்கக் கோரி படத் தயாரிப்பு நிறுவனத்திற்கு அமேசான் தரப்பில் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. இதனால் விஜய் தரப்பு அடுத்தடுத்து சிக்கலை எதிர்கொள்ளும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.
News January 22, 2026
மோடியை நண்பர் என குறிப்பிட்டு எச்சரித்த டிரம்ப்

PM மோடியை மதிப்பதாகவும், விரைவில் இந்தியா – அமெரிக்கா ஆகிய இரு நாடுகளும் சாதகமான ஒப்பந்தத்தை எட்டும் என டிரம்ப் கூறியுள்ளார். ரஷ்ய எண்ணெய் கொள்முதல் காரணமாக ஏற்கெனவே இந்திய ஏற்றுமதிகள் மீது அவர் 50% வரி விதித்துள்ளார். இந்நிலையில் PM மோடியை தனது நண்பர் என கூறியதுடன், நாங்கள் வரிகளை உயர்த்தினால், அது இந்தியாவுக்கு மிகவும் மோசமாக இருக்கும் எனவும் டிரம்ப் எச்சரித்துள்ளார்.


