News March 29, 2024
ராகுல் காந்தி பிரதமர் ஆக ஆதரவு

இந்திய ஜனநாயக புலிகள் என்ற புதிய கட்சியை தொடங்கியுள்ள நடிகர் மன்சூர் அலிகான், ராகுல் காந்தி பிரதமர் ஆக வேண்டும் என்று ஆதரவு அளித்திருப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. ஈழத் தமிழர்களின் இனப் படுகொலைக்கு காங்கிரஸ் துணை நின்றதாக நம்புபவர்கள் தமிழ் தேசியவாதிகள். ஆனால், தன்னை தமிழ் தேசியவாதி என்று சொல்லிக் கொள்ளும் மன்சூர் அலிகான், காங்கிரசுக்கு ஆதரவு தெரிவித்துள்ளார்.
Similar News
News April 5, 2026
இந்த எழுத்துக்களின் அர்த்தம் தெரியுமா?

உங்களுக்கு வரும் ஒவ்வொரு மெசேஜின் கடைசியிலும் S,P,G,T போன்ற எழுத்துக்கள் கண்டிப்பாக இடம்பெற்றிருக்கும். அந்த மெசேஜ் எதன் அடிப்படையில் அனுப்பப்பட்டது என்பதை அவை உணர்த்தும் ★P- Promotion. ரீசார்ஜ், விளம்பர மெசேஜ்கள் ★S- Service. டெலிவரி, பண பரிவர்த்தனை மெசேஜ்கள் ★G- Government. அரசு சார்பில் அனுப்பப்படும் மெசேஜ்கள் ★T- Transactional. OTP, டிக்கெட் புக்கிங் பற்றிய மெசேஜ்கள். SHARE IT.
News April 5, 2026
IPL டாஸ்: ஹைதராபாத் அணி பேட்டிங்

SRH-க்கு எதிரான ஆட்டத்தில் டாஸ் வென்ற LSG பவுலிங்கை தேர்வு செய்துள்ளது. SRH அணியில் ஹர்ஷல் படேல் மற்றும் லிவிஸ்டன் இணைந்துள்ளனர். அதேபோல், LSG அணியில் நோர்க்யாவுக்கு பதில் மணிமாறன் சித்தார்த் சேர்க்கப்பட்டுள்ளார். இதுவரை இரு அணிகளும் 6 முறை மோதியுள்ளன. இதில் 4 முறை LSG அணி வெற்றி பெற்றுள்ளது.
News April 5, 2026
அந்த வேதனை இருக்கே வேதனை.. என்னன்னு பாருங்க

நம்மூரைத் தாண்டி வேறு சில ஊர்களில் சால்னாவுக்கு தனி காசு கேட்டாலே நமக்கு கோபம் வரும். இங்கோ ‘Chilly dusted gold fingers’ என்ற பெயரில், பெட்டிக்கடைகளில் விற்கும் குடல் அப்பளத்தை ஒருவர் ₹150 கொடுத்து வாங்கியுள்ளார். ‘என் வம்சத்தில் அப்பளத்தை ₹150 கொடுத்து வாங்கிய முதல் ஆள் நான்தான்’ என்றும் தனது வேதனையை அவர் SM-ல் கொட்டி தீர்த்துள்ளார். என்னவென்று நினைத்து இந்த பொருளை அவர் ஆர்டர் செய்திருப்பார்?


