News December 19, 2024
முதலாளிகளுக்கு மட்டுமே ஆதரவு: ராகுல்

முதலாளிகளுக்கு ஆதரவாக மத்திய அரசு செயல்படுவதால் நாட்டின் இறக்குமதி அதிகரித்து வருவதாக ராகுல் MP குற்றஞ்சாட்டியுள்ளார். இது தொடர்பான X பதிவில், கடந்த நவம்பர் மாதம் நாட்டின் வர்த்தக பற்றாக்குறை $37.9 பில்லியனாக உள்ளது. இறக்குமதி அதிகரிப்பால் இந்த பற்றாக்குறை ஏற்பட்டதாக தெரிவித்துள்ளார். மேலும் ஏற்றுமதி வளர்ச்சியில் மத்திய அரசு கவனம் செலுத்துவது இல்லை எனவும் அவர் கடுமையாக சாடியுள்ளார்.
Similar News
News September 6, 2025
தீபாவளிக்கு டபுள் போனஸ்.. அரசின் இன்ப அதிர்ச்சி

மத்திய அரசு ஊழியர்களுக்கான DA(அகவிலைப்படி) உயர்வு குறித்த முக்கிய தகவல் வெளியாகியுள்ளது. தீபாவளியையொட்டி, 55%-ல் இருந்து 58% ஆக உயர்த்தி DA வழங்கப்படும் என ஏற்கெனவே மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்தன. இந்நிலையில், ஜூலை மாதத்தில் இருந்து 3% உயர்வை கணக்கிட்டு அக்டோபர் சம்பளத்தில் 3 மாத DA நிலுவைத் தொகை சேர்த்து வழங்கப்படும் எனக் கூறப்படுகிறது. இதற்கான அறிவிப்பு விரைவில் வெளியாக வாய்ப்புள்ளது.
News September 6, 2025
விஜய்யின் சுற்றுப்பயணத்தை தடுக்க அரசு முயற்சி: தவெக

விஜய்யின் சுற்றுப்பயணத்தை தடுக்க போலீஸ் மூலம் அரசு நெருக்கடி கொடுப்பதாக தவெகவின் ஆதவ் அர்ஜுனா குற்றஞ்சாட்டியுள்ளார். எந்த தலைவரும் மக்களை சந்திப்பதை, எப்பேர்ப்பட்ட அதிகார சக்தியாலும் தடுக்க முடியாது எனவும், அப்படி தடுக்க நினைத்தவர்களை மக்களே தூக்கி எறிந்த வரலாறு உண்டு என்றும் அவர் கூறியுள்ளார். மேலும், மக்களே திமுக அரசின் அதிகாரத்திற்கு முடிவுரை எழுதுவார்கள் என்றும் தெரிவித்துள்ளார்.
News September 6, 2025
பெரிய படங்கள் மீது குறிவைத்து தாக்குதல்: தயாரிப்பாளர்

தமிழ் சினிமாவில் பெரிய பட்ஜெட் படம் வந்தால், திட்டமிட்டு நெகட்டிவ் தகவல்களை பரப்புவதாக தயாரிப்பாளர் தனஞ்செயன் வேதனை தெரிவித்துள்ளார். சினிமாவை மிஸ்யூஸ் செய்யாமல், நல்ல சினிமாவிற்கு எப்போதும் ஆதரவளிக்கவும் வலியுறுத்தியுள்ளார். மேலும் இசையமைப்பாளராக ஜிவியை நெருங்குவது கடினம், ஆனால் நடிகராக அவரை அணுகுவது எளிது, சம்பளம் வாங்காமல் கூட நடிப்பார் என்றும் தெரிவித்துள்ளார்.