News June 18, 2024

இடைத்தேர்தலில் பாமகவுக்கு ஐஜேகே ஆதரவு

image

விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலில் என்டிஏ கூட்டணி சார்பில் பாமக வேட்பாளர் சி.அன்புமணி போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், இத்தேர்தலில் பாமகவுக்கு இந்த கூட்டணியில் உள்ள இந்திய ஜனநாயக கட்சி ஆதரவு தெரிவிப்பதாக கட்சியின் தலைவர் ரவி பச்சமுத்து தெரிவித்துள்ளார். அத்துடன், அக்கட்சியின் சார்பில் 100 நிர்வாகிகள் அந்த தொகுதியில் தேர்தல் களப்பணி ஆற்றுவார்கள் என்றும் அவர் கூறினார்.

Similar News

News April 2, 2026

பூக்கள் விலை பாதியாக குறைந்தது!

image

மதுரை, ஆண்டிபட்டி, குமரி தோவாளை சந்தைகளில் பூக்கள் விலை கணிசமாக குறைந்துள்ளது. மதுரையில் கடந்த சில நாள்களாக மல்லிகைப்பூ கிலோ ₹1,500 – ₹2,000 வரை விற்பனையான நிலையில், இன்று ₹700 ஆக குறைந்துள்ளது. பிச்சி, முல்லை தலா ₹500, செவ்வந்தி – ₹250, சம்பங்கி – ₹120, பட்டன் ரோஸ் – ₹150, அரளி – ₹350 என விற்பனையாகிறது. சுப முகூர்த்தம், கோயில் திருவிழா காலம் என்பதால் விலை குறைவால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

News April 2, 2026

இரண்டே நாள் தான்.. இரண்டு கட்சிகள் என்ன செய்கின்றன?

image

வேட்புமனு தாக்கலுக்கு கடைசி நாள் ஏப்.6. விடுமுறையை தவிர்த்து 2 நாள்களே உள்ளன. ஆனால் தேசிய கட்சிகளான காங்., பாஜக ஆகியவை இதுவரை வேட்பாளர் பட்டியலை இறுதி செய்யவில்லை. இன்று இரவு காங்., வேட்பாளர் பட்டியல் அறிவிக்கப்படும் என ஸ்டாலின் அப்டேட் கொடுத்த நிலையில், மறுபுறம் பாஜகவில் குழப்பம் நீடிப்பதாக கூறப்படுகிறது. சில தொகுதிகளை மாற்றி கேட்பதால் அதிமுக வேட்பாளர்களும் வேட்புமனு தாக்கல் செய்யாமல் உள்ளனராம்.

News April 2, 2026

BREAKING: ரத்து செய்தார் பிரதமர் மோடி

image

சென்னையில் நடைபெறவிருந்த பாஜக உயர்மட்ட நிர்வாகிகள் கூட்டத்தை PM மோடி ரத்து செய்துள்ளார். கிண்டியில் உள்ள நட்சத்திர விடுதியில் 150 நிர்வாகிகளுடன் இந்த சந்திப்பானது நாளை மறுதினம் நடைபெறவிருந்தது. வேட்பாளர்கள் தேர்வில் ஏற்படும் தாமதம் காரணமாக PM மோடி இந்த முடிவை எடுத்துள்ளதாக தெரிகிறது. தேர்தல் பரப்புரைக்காக PM மோடி நாளை சென்னை வழியாக புதுச்சேரி செல்ல உள்ளார். <<-se>>#TNElection2026<<>>

error: Content is protected !!