News March 4, 2025

மாதவிடாய் வலியை போக்க சூப்பர் டிப்ஸ்!

image

மாதவிடாய் காலத்தில் ஏற்படும் வயிற்று வலியையும், மன உளைச்சலையும் போக்க சில பழங்களை டாக்டர்கள் பரிந்துரைக்கின்றனர். வாழை, பப்பாளி, அன்னாசி, தர்பூசணி, ஆரஞ்சு ஆகிய பழங்கள்தான் அவை. வாழைப்பழத்தின் மெக்னீசியம், மாதவிடாய் வலியின் தீவிரத்தை குறைக்கிறது. பப்பாளியின் விட்டமின் A, ஹார்மோன் சமநிலையை காக்கிறது. ஆப்பிளின் நார்ச்சத்தும், இரும்பு சத்தும் சோர்வு, மனநிலை மாற்றத்தை போக்குகிறது.

Similar News

News March 4, 2025

பிரபல பாடகியின் கணவர் காலமானார்

image

அமெரிக்காவின் மிகப் பிரபலமான நாட்டுப்புற பாடகி டாலி பார்ட்டன். தன் கணவர் கார்ல் டீன் காலமானதாக அறிவித்துள்ள டாலி, ‘நானும் கார்லும் ஒன்றாக வாழ்ந்த ஆண்டுகள் அற்புதமானவை. 60 ஆண்டுகள் நாங்கள் பகிர்ந்துகொண்ட அன்பை சொல்ல வார்த்தைகள் போதாது’ என்று உருக்கமாக குறிப்பிட்டுள்ளார். கார்லின் மறைவுக்கு உலகம் முழுவதும் திரை, கலையுலக பிரபலங்களும், ரசிகர்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

News March 4, 2025

வெற்றியை நெருங்கும் இந்தியா

image

சாம்பியன்ஸ் டிராபி செமி பைனலில் இந்திய அணி வெற்றியை நெருங்கி வருகிறது. ஆஸி., நிர்ணயித்த 265 ரன்கள் இலக்கை விரட்டும் இந்திய அணி, 40 ஓவர்கள் முடிவில் 200/4 ரன்கள் எடுத்துள்ளது. கோலி 80 ரன்களுடனும், கே.எல்.ராகுல் 10 ரன்னுடனும் களத்தில் உள்ளனர். இந்த முறையும் சேஸிங் கிங் கோலி நாட்டுக்கு வெற்றியை தேடித் தருவார் என ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

News March 4, 2025

பிரபல பாடகி கல்பனா தற்கொலை முயற்சி!

image

பிரபல பாடகி கல்பனா தற்கொலைக்கு முயன்ற சம்பவம் சினிமா வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஹைதராபாத்தில் வசித்து வந்த கல்பனா இன்று இரவு திடீரென தற்கொலைக்கு முயன்றார். தற்போது அவர் ஹாஸ்பிட்டலில் ஐசியுவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவர் எதற்காக தற்கொலைக்கு முயன்றார் என்பது தெரியவில்லை. ‘என் ராசாவின் மனசிலே’ படத்தில் வரும் ‘போடா போடா புண்ணாக்கு’ பாடலை சிறு வயதில் பாடியவர் இவர்தான்.

error: Content is protected !!