News April 17, 2025

சம்மரில் கிச்சன் உஷ்ணம் இன்றி இருக்க.. சூப்பர் டிப்ஸ்!!

image

கோடை காலத்தில் கிச்சனில் சமைக்கும் போது, உடலின் உஷ்ணத்தை குறைக்க சூப்பர் டிப்ஸ்: சீக்கிரமாக தயாராகும் உணவுகளைத் தேர்ந்தெடுத்து சமைக்கலாம் *சமைக்கும் போது, ஜன்னலை திறந்து வையுங்கள். Exhaust ஃபேனை பயன்படுத்துங்கள் *உடலை குளிர்ச்சியாக வைத்துக் கொள்ள அடிக்கடி தண்ணீர், பழச்சாறுகளை பருகுங்கள் *ஃப்ரை பண்ணி சாப்பிடும் உணவுகளை தவிர்ப்பது, உஷ்ணத்தையும் குறைக்கும், உடல் ஆரோக்கியத்திற்கு நல்லது.

Similar News

News December 1, 2025

செயலில் காட்டுங்க PM மோடி: செல்வப்பெருந்தகை

image

தமிழுக்​கான உண்​மை​யான மரி​யாதையை நிதி ஒதுக்கீடு, வளர்ச்சி திட்​டங்​கள் மூலம் PM மோடி காட்டவேண்டும் என செல்வப்பெருந்தகை கூறியுள்ளார். மத்திய அரசு சமஸ்கிருதத்துக்காக ₹2532 கோடி செலவிட்டதாகவும், ஆனால் தமிழ் உள்பட 5 மொழிகளுக்​கு ₹147.56 கோடி மட்டுமே செலவிட்டதாகவும் சுட்டிக்காட்டினார். மேலும், PM தமிழை உயர்த்தி பேசியதில் பெருமை தான் என்ற அவர், ஆனால் செயலில் TN-ஐ புறக்கணிப்பதாக விமர்சித்துள்ளார்.

News December 1, 2025

உலகின் தலையெழுத்து மாறிய தினம் இன்று!

image

2019, டிசம்பர் 1-ம் தேதி, உலக தலையெழுத்து மாறிய தினம். சீனாவின் ஊகானில் உலகின் முதல் கொரோனா பாதிப்பு பதிவு செய்யப்பட்டது. வேகமாக பரவிய பாதிப்பால், உலக நாடுகளின் எல்லைகள் மூடப்பட்டன, பல குடும்பங்கள் பிரிந்தன, வீதிகள் வெறிச்சோடின, கோடிக்கணக்கான உயிர்கள் மறைந்தன. இன்னும் எத்தனை ஆண்டுகள் ஆனாலும், கொரோனா காயம் மனித மனங்களில் நீங்காத ரணமாக இருக்கும். உங்க வாழ்க்கையை கொரோனா எப்படி பாதித்தது?

News December 1, 2025

நாட்டுக்காக வாழ்வை அர்ப்பணித்தவர் CPR: PM மோடி

image

துணை ஜனாதிபதியாக பதவியேற்ற பின், சி.பி.ராதாகிருஷ்ணன் பங்கேற்கும் முதல் ராஜ்ய சபா கூட்டம் என்பதால், அவருக்கு PM மோடி வாழ்த்து தெரிவித்தார். தொடர்ந்து பேசிய PM, எளிய குடும்பத்தில் இருந்து வந்த CPR, நாட்டுக்காக வாழ்வை அர்ப்பணித்தவர் என்று புகழ்ந்தார். கோவை குண்டுவெடிப்பில் CPR உயிர் தப்பியதை பற்றி குறிப்பிட்டு பேசிய PM, உங்களுடன் நீண்ட நாள்களாக பணியாற்றி வருவதில் மகிழ்ச்சி என்று கூறினார்.

error: Content is protected !!