News August 25, 2024
விடுமுறை தினத்தை கொண்டாட சூப்பர் Smoothie

விடுமுறை என்றாலே ரிலாக்ஸ் செய்வது தான். பிடித்த படங்களை பார்ப்பது; பிடித்த உணவுகளை ஒரு புடி புடிப்பது என்று பலரும் இருப்பார்கள். அப்படி ஹெவியான உணவுகளை எடுக்கும்போது வயிறு மந்தமாகிவிடும். எனவே, விடுமுறை தினத்தின் மாலை நேரங்களில் 3 கப் பைன் ஆப்பிள், சிறிது எலுமிச்சை சாறு, 3 ஸ்பூன் தேன், ஒரு இளநீர், 6 ஐஸ் கட்டிகளை மிக்சியில் அடித்து சூப்பரான ஸ்மூதியை தயார் செய்து குடிக்கலாம். வயிறு லேசாகிவிடும்.
Similar News
News August 24, 2025
JUSTIN: ககன்யான் திட்டத்தின் பாராசூட் சோதனை வெற்றி

விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பும் ககன்யான் திட்டத்தின் பாராசூட் சோதனை வெற்றிகரமாக நிகழ்த்தப்பட்டதாக இஸ்ரோ(ISRO) தெரிவித்துள்ளது. இந்திய விமானப்படை, கடற்படையுடன் இணைந்து இந்த சோதனை நடத்தப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது. விண்வெளியில் இருந்து விண்கலம் பூமிக்குத் திரும்பும்போது அதன் வேகத்தைக் குறைக்கும் வகையில் இந்த பாராசூட் உருவாக்கப்பட்டுள்ளது.
News August 24, 2025
பொது அறிவு வினா- விடை பதில்கள்!

காலை 11:30 மணிக்கு கேட்கப்பட்ட கேள்விகளுக்கான பதில்கள். கேள்விகளுக்கு இங்கே கிளிக் செய்யவும்.
1. 1939
2. 4 ஆண்டுகளுக்கு ஒரு முறை
3. Fathometer
4. பற்சிப்பி (enamel)
5. ஆர்யபட்டா
எத்தனை கேள்விக்கு சரியாக பதில் சொன்னீங்க?
News August 24, 2025
FASTag பாஸ் இங்கலாம் செல்லாது.. தெரியுமா?

FASTag வருடாந்திர பாஸ் NHAI-ன் கட்டுப்பாட்டில் இல்லாத, மாநில அரசுகளால் நிர்வகிக்கப்படும் நெடுஞ்சாலைகளில் செல்லாது. இதில் பயணம் செய்பவர்கள் வழக்கமான FASTag இருப்புத் தொகையிலிருந்து கட்டணம் செலுத்த வேண்டும். உதாரணத்திற்கு, வால்பாறை-பொள்ளாச்சி மாநில நெடுஞ்சாலை, ஈரோடு-கரூர் மாநில நெடுஞ்சாலை, சென்னை-சேலம் விரைவுச்சாலை போன்ற சாலைகளில் இந்த வருடாந்திர பாஸ் செல்லாது. SHARE.