News February 2, 2025
சூப்பர் பட்ஜெட்: நிதிஷ்குமார்

மத்திய அரசின் பட்ஜெட் நாட்டு வளர்ச்சியை மேம்படுத்தும் என பிஹார் முதல்வர் நிதிஷ்குமார் பாராட்டியுள்ளார். வருமான வரியில் மாற்றம், விவசாயிகளுக்கான கிரெடிட் கார்டு உள்ளிட்ட பல அறிவிப்புகளை குறிப்பிட்டு பாராட்டிய அவர், பிஹாருக்கான அறிவிப்புகள் மாநிலத்தை வளப்படுத்தும் எனவும் தெரிவித்துள்ளார். பிஹார் தேர்தலை முன்னிட்டு, பட்ஜெட்டில் அம்மாநிலத்திற்கு முக்கியத்துவம் தரப்பட்டுள்ளதாக விமர்சனங்கள் உள்ளது.
Similar News
News March 14, 2026
அதிமுகவை பாஜக கபளீகரம் செய்யும்: உதயநிதி

பிஹாரில் நிதிஷ்குமாருக்கு ஏற்பட்ட நிலையே EPS-க்கும் ஏற்படும் என உதயநிதி கூறியுள்ளார். 10 முறை CM ஆக இருந்த நிதிஷ்குமாரையே தற்போது ராஜ்யசபா MP ஆக மாற்றி, அம்மாநில ஆட்சியை பாஜக தன்வசமாக்கிவிட்டது என்ற அவர், இதேபோல் தான், 2026 தேர்தலுக்குப் பிறகு அதிமுகவை பாஜக கபளீகரம் செய்துவிடும் என்று குறிப்பிட்டார்.
News March 14, 2026
தவெகவில் இருந்து நீக்குக.. விஜய்க்கு பரபரப்பு கடிதம்

‘அரசியல் முதிர்ச்சி இல்லாத நபர்களை கட்சியை விட்டு விலக்குங்கள்’ என விஜய்க்கு பாஜக நிர்வாகி அர்ஜுன மூர்த்தி கடிதம் எழுதியுள்ளார். ரஜினி குறித்து ஆதவ் உள்ளிட்டோர் அரசியல் நாகரிகம் இல்லாத கருத்துகளால் தேவையற்ற மோதல்களையும், மரியாதை குறைபாடுகளையும் உருவாக்கி வருகின்றனர். தங்கள் மீதுள்ள மரியாதையும், அவர்களின் பேச்சால் பதிக்கப்படும் நிலை உருவாகியுள்ளதால், கட்சியில் இருந்து நீக்குங்கள் என கூறியுள்ளார்.
News March 14, 2026
சசிகலா கட்சி சின்னமும் ஜெ., அழைப்பும்.. REWIND

அஇபுதமமுக கட்சியில் இணைந்துள்ள சசிகலா, அக்கட்சிக்கான தென்னந்தோப்பு சின்னத்தையும் அறிமுகப்படுத்தினார். இதற்கு முன்பாக 2016-ல் தமாகாவுக்கு இச்சின்னம் ஒதுக்கப்பட்டிருந்தது. அப்போது இரட்டை இலையில் போட்டியிடுமாறு ஜெ., அழைத்தும், GK வாசன் செல்லவில்லை. தென்னந்தோப்பு சின்னத்தில் தோல்வியடைந்த அவர், பின்னாளில் அதிமுக சின்னத்திலேயே போட்டியிட்டு ராஜ்யசபா MP ஆனார் என்பது குறிப்பிடத்தக்கது.


