News June 14, 2024
சன்னி லியோன் நடன நிகழ்ச்சிக்கு தடை

கல்லூரி நிகழ்ச்சியில் சன்னி லியோன் நடனமாட தடை விதிக்கப்பட்டுள்ளது. பல்கலைகழக என்ஜினீயரிங் கல்லூரி வளாகத்தில் ஜூலை 5ஆம் தேதி சன்னி லியோன் நடன நிகழ்ச்சியை நடத்த ஏற்பாடு செய்து இருந்தனர். இந்த நிலையில் சன்னி லியோன் நடன நிகழ்ச்சிக்கு அனுமதி மறுத்து கேரள பல்கலைக்கழக துணை வேந்தர் உத்தரவிட்டுள்ளார். ஏற்கனவே, பெங்களூருவில் புத்தாண்டு தினத்தில் சன்னி லியோன் நடன நிகழ்ச்சிக்கு தடை விதிக்கப்பட்டது.
Similar News
News March 1, 2026
இன்னும் 1000 இடங்களில் தாக்குதல் நடக்கும்: இஸ்ரேல்

ஈரானில் வரும் நாள்களில் ஆயிரக்கணக்கான இலக்குகளை தாக்குவோம் என இஸ்ரேல் PM பெஞ்சமின் நெதன்யாகு எச்சரித்துள்ளார். ஈரானின் துணிச்சலான மக்கள் கொடுங்கோல் ஆட்சியின் பிடியிலிருந்து தங்களை விடுவித்துக் கொள்வதற்கான சூழலை இஸ்ரேல் உருவாக்கும் என கூறியுள்ளார். ஈரான் குடிமக்களே, இந்த வாய்ப்பை நழுவ விடாதீர்கள்; இது ஒரு தலைமுறைக்கு ஒருமுறை மட்டுமே கிடைக்கும் வாய்ப்பு எனவும் கூறியுள்ளார்.
News March 1, 2026
சமூகநீதிக்கும் ஸ்டாலினுக்கு சம்பந்தம் இல்லை: அன்புமணி

தேசிய பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்திற்கு அரசியல் சாசன அங்கீகாரத்தை கொடுத்தவர் PM மோடி என அன்புமணி தெரிவித்துள்ளார். NDA பொதுக்கூட்டத்தில் பேசிய அவர், பாஜக ஆளும் பிஹாரில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்பட்டு அதற்கேற்ப நலத்திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளார். மேலும், சமூகநீதிக்கும் ஸ்டாலினுக்கு சம்பந்தம் இல்லை என்றும், சமூகநீதி என்றாலே PM மோடிதான் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
News March 1, 2026
3 ராசிகளுக்கு எச்சரிக்கை

சூரியன் மற்றும் சனி சேர்க்கையால் இம்மாதம் யுதி திருஷ்டி யோகம் உண்டாக இருப்பதால் 3 ராசியினர் எச்சரிக்கையாக இருக்க வேண்டுமாம். அதன்படி, *மேஷம்: காதல் வாழ்க்கையில் சிக்கல் வரும். திருமணமாகாதவர்களுக்கு துணை கிடைப்பது கடினமாக இருக்கும். *துலாம்: நிதி இழப்புகள் ஏற்படலாம். சொத்து வாங்கும் (அ) விற்கும் முடிவுகள் தவறாக முடியலாம். *கும்பம்: உறவினர்கள் இடையே கருத்து வேறுபாடு ஏற்படும். கவனமாக இருங்கள்.


