News August 16, 2024
சுனிதாவின் அரசியல் பயணம் முடிவுக்கு வரலாம்: சிசோடியா

கெஜ்ரிவால் விடுதலையானதும், அவரது மனைவி சுனிதாவின் அரசியல் பயணம் முடிவுக்கு வரலாம் என மனீஷ் சிசோடியா கூறியுள்ளார். கெஜ்ரிவால் சிறையில் இருந்த நேரத்தில் கட்சியின் வளர்ச்சிக்கு சுனிதா பாலமாக செயல்பட்டதாக தெரிவித்த அவர், சுனிதாவின் பரப்புரை பேச்சுக்களை பார்த்து தான் ஆச்சரியப்பட்டதாகவும் வியப்பு தெரிவித்தார். 17 மாத சிறைவாசத்துக்கு பிறகு கடந்த வாரம் சிசோடியா ஜாமினில் விடுதலையானார்.
Similar News
News December 6, 2025
முருகன் இப்போதுதான் தெரிகிறாரா? சீமான்

பல கோடி மக்கள் வாழ்வில் விளக்கின்றி இருளில் கிடக்கும் நிலையில், திருப்பரங்குன்றம் மலையில் விளக்கேற்ற துடிக்கின்றனர் என சீமான் விமர்சித்துள்ளார். மலைகள் கல்குவாரிகளாக மாற்றப்பட்ட போது ஏன் அவர்கள் வரவில்லை என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார். பாஜக உள்ளிட்ட ஹிந்துத்துவா அமைப்புகளுக்கு இன்று தான் முருகன் கண்ணுக்கு தெரிகிறாரா என்றும் சீமான் கேட்டுள்ளார்.
News December 6, 2025
மதுரை புதிய மேம்பாலத்திற்கு வேலுநாச்சியார் பெயர்

மதுரை மேலமடை சந்திப்பு சாலையில் புதிதாக கட்டப்பட்டுள்ள மேம்பாலத்திற்கு வீரமங்கை வேலுநாச்சியார் பெயர் சூட்டப்படுவதாக CM ஸ்டாலின் அறிவித்துள்ளார். பிரிட்டிஷ் ஆட்சியில் ஆங்கிலேயர்களை எதிர்த்து போரிட்ட வீரமங்கையின் பெயரை சூட்டுவதில் தனக்கு பெருமை என்றும் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். ₹150.28 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள இந்த மேம்பாலம், 950 மீ., நீளம் கொண்டது.
News December 6, 2025
அன்புமணி மீது ராமதாஸ் கிரிமினல் புகார்

பாமக உள்கட்சி விவகாரம் பூதாகரமாக வெடித்துக் கொண்டிருக்கிறது. இந்நிலையில், அன்புமணி மீது ராமதாஸ் தரப்பில் இன்னும் சற்றுநேரத்தில் சிபிஐயில் புகார் தெரிவிக்க இருப்பதாக கூறப்படுகிறது. பாமக பொதுக்குழு குறித்த போலியான ஆவணங்களை தேர்தல் ஆணையத்தில் சமர்ப்பித்த அன்புமணி மீது கிரிமினல் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, சிபிஐ இயக்குனரை நேரில் சந்தித்து ஜி.கே.மணி புகார் மனுவை கொடுக்கவிருக்கிறார்.


