News December 31, 2024
16 முறை New Year-ஐ celebrate செய்யும் சுனிதா வில்லியம்ஸ்

பூமியில் உள்ள அனைவருக்கும் ஒருமுறை புத்தாண்டு என்றால், சர்வதேச விண்வெளி மையத்தில் சுனிதா வில்லியம்ஸ் உள்ளிட்ட (ISS) விண்வெளி வீரர்கள் 16 முறை புத்தாண்டை கொண்டாடுவார்கள். இன்று காலையில் இருந்து பூமியை முன்னும் பின்னுமாக 90 நிமிடத்துக்கு ஒருமுறை சுற்றுவார்கள். அதன் காரணமாக இன்றில் இருந்து நாளை வரை இவர்களுக்கு 16 sunrises and sunsets ஏற்படும். இதன்படி, அவர்களுக்கு 16 தடவை புத்தாண்டு பிறக்கும்.
Similar News
News November 28, 2025
நடிகர் தர்மேந்திரா மறைவு: ஹேமமாலினி உருக்கம் (PHOTOS)

நீங்கள் விட்டு சென்ற இடம் எப்போதும் வெற்றிடமாகவே இருக்கும் என நடிகை ஹேமமாலினி, கணவர் தர்மேந்திராவின் மறைவால் மீளா துயரத்தில் ஆழ்ந்துள்ளார். முதல் மனைவியை விவாகரத்து செய்யாமலே ஹேமமாலினியை தர்மேந்திரா 2-வது திருமணம் செய்ததால், அது சர்ச்சையை ஏற்படுத்தி இருந்தது. தற்போது நீங்காத நினைவுகளாக இருக்கும் போட்டோக்களை X தளத்தில் ‘Some memorable moments’ என உருக்கமாக தொடர்ச்சியாக பதிவிட்டு வருகிறார்.
News November 28, 2025
நெருங்கும் டிட்வா புயல்: வார் ரூமில் CM ஸ்டாலின்!

டிட்வா புயலால் <<18411226>>5 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்<<>> விடுக்கப்பட்டுள்ள நிலையில், வார் ரூமில் CM ஸ்டாலின் ஆய்வு செய்தார். கலெக்டர்களுடன் காணொலி வாயிலாக ஆலோசனை மேற்கொண்ட CM, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து கேட்டறிந்தார். தொடர்ந்து பேட்டியளித்த அவர், போதுமான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாகவும், மழையில் மக்கள் பாதிக்கப்படாமல் இருக்க தேவையான பணிகளை செய்ய ஆணையிட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
News November 28, 2025
போன் இருந்தா போதும்.. ₹10 லட்சம் காப்பீடு பெறலாம்!

PM ஆயுஷ்மான் யோஜனா திட்டத்தின் மூலம் பொருளாதாரத்தில் பின்தங்கிய குடும்பத்துக்கு ஆண்டுதோறும் ₹5 லட்சம் மருத்துவ காப்பீட்டு பெறலாம். <


