News December 20, 2024
ISSஇல் கிறிஸ்துமஸ் கொண்டாடிய சுனிதா

கிறிஸ்துமஸ் பண்டிகை மண்ணுலகம் மட்டுமின்றி, விண்ணுலகிலும் களைகட்டியுள்ளது. சர்வதேச விண்வெளி நிலையத்தில் உள்ள சுனிதா வில்லியம்ஸ், சாண்டா வேடமணிந்து கொண்டாட்டத்தில் ஈடுபட்டார். 8 நாள் பயணமாக கடந்த ஆண்டு ஜூன் மாதம் ISS சென்ற அவர், ஸ்டார்லைனர் விண்கலனில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறால் 6 மாதங்களாக அங்கேயே தங்கியுள்ளார். மேலும், 2025 ஏப்ரலுக்கு அவர் பூமிக்கு திரும்புவார் என NASA கூறியுள்ளது.
Similar News
News March 4, 2026
விஜய்யின் இயக்குநர்கள் ஆதவ், அருண்ராஜ்: ஜெயக்குமார்

விஜய் நடிப்பில் கைத்தேர்ந்தவர் என்பதால் எழுதிக்கொடுத்த ஸ்கிரிப்டை ஆக்ஷனுடன் மேடையில் பேசுகிறார் என ஜெயக்குமார் விமர்சித்துள்ளார். அவரை ஆதவ் அர்ஜுனா மற்றும் அருண்ராஜ் இயக்குநர்களாக இருந்து இயக்குவதாகவும் சாடியுள்ளார். விஜய் செய்தியாளர்களை சந்தித்து பேசமுடியுமா என கேள்வி எழுப்பிய அவர், ஏதோ தனக்குத்தான் தில்லு, திராணி இருப்பதுபோல் வேடிக்கை காட்டுவதாகவும் தெரிவித்துள்ளார்.
News March 4, 2026
ஒரே போட்டியால் 25 இடங்கள் முன்னேறிய சஞ்சு சாம்சன்!

தொடர் விமர்சனங்களுக்கு பதிலளிக்கும் விதமாக, டி20 WC-ல் WI அணிக்கு எதிரான வாழ்வா சாவா போட்டியில் 97 ரன்கள் குவித்து இந்தியாவை அரையிறுதிக்கு அழைத்து சென்றார் சஞ்சு சாம்சன். இந்நிலையில் ICC டி20 தரவரிசையில் 25 இடங்கள் தாவி 40-வது இடத்திற்கு முன்னேறியுள்ளார் சாம்சன். அதேநேரம், சூர்யகுமார் (7), திலக் வர்மா (6), இஷான் கிஷன் (4) மற்றும் அபிஷேக் சர்மா (1) ஆகிய இந்திய வீரர்கள் டாப் 10-ல் இடம்பெற்றுள்ளனர்.
News March 4, 2026
படுத்த படுக்கையில் நடிகை ராஜ்ஸ்ரீ தேஷ்பாண்டே

தனக்கு கிரேடு 1 மார்பகப் புற்றுநோய் உள்ளதாக நடிகை ராஜ்ஸ்ரீ தேஷ்பாண்டே தெரிவித்துள்ளார். ஹாஸ்பிடலில் படுக்கையில் இருந்தவாறான போட்டோவை பகிர்ந்துள்ள அவர், ஆபரேஷனுக்குப் பிறகு அனைவரின் ஆதரவோடும் உலகை எதிர்கொள்ள தயாராக இருப்பதாக உணர்கிறேன் என்றும் குறிப்பிட்டுள்ளார். விரைவில் குணமடைய ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து கமெண்ட் செய்கின்றனர். இவர் ‘தக் லைஃப்’ படத்தில் கனிகா என்ற கேமியோ ரோலில் நடித்துள்ளார்.


