News April 27, 2024
ஐபிஎல்லில் 2ஆம் இடத்துக்கு சுனில் நரைன் முன்னேற்றம்

ஐபிஎல் ரன் குவிப்பில் கொல்கத்தா வீரர் சுனில் நரைன், 2ஆவது இடத்துக்கு முன்னேறியுள்ளார். பஞ்சாப்புக்கு எதிராக நேற்று 71 ரன்கள் குவித்த அவர், ஏற்கெனவே டெல்லிக்கு எதிராக 85, ராஜஸ்தானுக்கு எதிராக 109 ரன்கள் விளாசியுள்ளார். இதையும் சேர்த்து 8 போட்டிகளில் 357 ரன்கள் எடுத்துள்ளார். இதன்மூலம் அதிக ரன் குவித்த பேட்ஸ்மேன் பட்டியலில் 2ஆவது இடத்தை பிடித்தார். முதலிடத்தில் கோலி (430 ரன்) உள்ளார்.
Similar News
News January 24, 2026
இந்த கூட்டணிக்கு டிக் அடிக்கப்போகிறாரா விஜய்?

தவெகவிடம் தற்போது இரண்டு தேசிய கட்சிகள் பேச்சுவார்த்தை நடத்திவருவதாக கூறப்படுகிறது. NDA கூட்டணிக்கு அழைக்கும் பாஜக, கேட்கும் தொகுதிகள், கைகாட்டுபவர்களுக்கு MP சீட், Dy CM சீட் தருவதாக உத்தரவாதம் கொடுத்திருக்கிறது. இன்னொரு பக்கம் டெல்லி காங்கிரசும் பேசிவருவதாக சொல்கின்றனர். எனவே கூட்டணி வைத்து போட்டியா, தனித்து போட்டியா என பனையூரில் தீவிர ஆலோசனை நடந்துவருவதாக தகவல் கசிந்துள்ளது.
News January 24, 2026
ஜன.27-ல் ஜன நாயகன் வழக்கில் தீர்ப்பு

‘ஜன நாயகன்’ பட சென்சார் வழக்கு தொடர்பாக ஜன.27 காலை 10.30 மணிக்கு சென்னை HC தீர்ப்பு வழங்கவுள்ளது. இதனால் படக்குழு மட்டுமல்லாது, விஜய் ரசிகர்களும் குஷியில் உள்ளனர். ஒருவேளை படத்திற்கு சாதகமான தீர்ப்பு வந்தால் பிப்ரவரி 2-வது வாரத்திலேயே ஜன நாயகன் படம் வெளியாக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. எனவே, விஜய் ரசிகர்கள் கொண்டாட தயாராகி வருகின்றனர்.
News January 24, 2026
பாஜகவை பார்த்து விஜய்க்கு அச்சம்: திருமா

‘ஜன நாயகன்’ தணிக்கை வழக்கில் பாஜகவின் தலையீடு இருந்தால் அதை விஜய் வெளிப்படையாக பேசியிருக்க வேண்டும் என திருமாவளவன் கூறியுள்ளார். ஆனால், பாஜக மற்றும் மோடி அரசை எதிர்ப்பதற்கு விஜய் தயாராக இல்லை என்றும், அவர் அச்சப்படுகிறார் என்பது மட்டும் தெளிவாக தெரிவதாகவும் திருமாவளவன் பேசியுள்ளார். மேலும், எதற்காக அச்சப்படுகிறார் என்ற காரணத்தை மக்களிடம் விஜய் கூறவேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டார்.


