News March 16, 2025
களத்தில் இறங்கிய சுனில் சேத்ரி!

இந்திய கால்பந்து அணிக்காக மீண்டும் சர்வதேச போட்டிகளில் களமிறங்கியுள்ள சுனில் சேத்ரி, தீவிர பயிற்சியில் ஈடுபட்டிருக்கிறார். மாலத்தீவு மற்றும் வங்கதேசத்துக்கு எதிரான போட்டிகளில் அவர் விளையாடவுள்ளார். அதிக கோல்கள் அடித்த வீரர்களில் 4 வது இடத்தில் உள்ள சுனில் சேத்ரி மீண்டும் இந்திய அணிக்கு திரும்பியிருப்பது ரசிகர்களை உற்சாகமடைய வைத்துள்ளது. நட்சத்திர வீரர் ரொனால்டோ முதலிடத்தில் உள்ளார்.
Similar News
News March 16, 2025
முறைகேடு விசாரணை உறவுக்காரர்கள் கையில்: விஜய்

<<15777897>>டாஸ்மாக் <<>>முறைகேடு தொடர்பான விசாரணை நியாயமாக நடக்குமா என்பது, மேலே இருக்கும் மறைமுக முதலாளிகளுக்கும் (பாஜக), இங்கிருக்கும் அவர்களின் உறவுக்காரர்களுக்கும் (திமுக) மட்டுமே வெளிச்சம் என்று விஜய் விமர்சித்துள்ளார். முறைகேடு மூலம் ஈட்டப்பட்ட பணம்தான் 200 தொகுதிகளில் வெல்வோம் என்ற சூளுரையின் பின்னணி என சாடிய அவர், எத்தனை கோடிகளை கொட்டினாலும் திமுகவை 2026இல் மக்கள் ஒதுக்கித் தள்ளுவார்கள் என்றார்.
News March 16, 2025
எழுத்தாளர் நாறும்பூநாதன் காலமானார்

நெல்லையை சேர்ந்த பிரபல எழுத்தாளர் நாறும்பூநாதன் (64) இன்று காலமானார். உடல்நலக்குறைவால் சில நாட்களாக அவதியடைந்து வந்த நிலையில், அவரது உயிர் இன்று பிரிந்துள்ளது. தமிழக அரசின் உ.வே.சா விருது பெற்ற இவரின் கனவில் உதிர்ந்த பூ உள்ளிட்ட சிறுகதைகள், திருநெல்வேலி: நீர்-நிலம்-மனிதர்கள், வேணுவன மனிதர்கள் உள்ளிட்ட நூல்கள் பிரபலமானவை. எழுதுவது மட்டுமல்ல, சமூக களப்பணியிலும் முன்னணியில் இருப்பவர்.
News March 16, 2025
பஸ்ஸூல உட்கார வேற இடமே கிடைக்கலையா?

ஆந்திராவில் மது போதையில் இருந்த நபர் அரசு பஸ்ஸூக்கு அடியில், ஸ்டெப்னி டயர் இருக்கும் பகுதியில் தொங்கியபடி பயணித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. சுமார் 15 கி.மீ தூரம் வரை அந்த நபர் பயணித்த நிலையில், பின்னால் வந்தவர்கள் அரசு பஸ் டிரைவரிடம் தகவல் அளித்து எச்சரித்துள்ளனர். அதன் பிறகே, பஸ்ஸை நிறுத்தி, ஸ்டெப்னி டிராவல் பயணியை மீட்டனர். கொஞ்சம் மிஸ்ஸாகி இருந்தால் என்னவாகியிருக்கும்?