News May 16, 2024
இந்தியாவின் கால்பந்தாட்ட ஹீரோ சுனில் சேத்ரி

குவைத்துக்கு எதிரான போட்டிக்கு பிறகு ஓய்வு பெறுவதாக, இந்திய கால்பந்து அணியின் கேப்டன் சுனில் சேத்ரி அறிவித்துள்ளார். இந்தியாவில் கால்பந்தாட்ட ஹீரோவாக கருதப்பட்டவர் பைசுங் பூட்டியா. அவருக்கு பின்பு பலராலும் அறியப்படுபவர் சுனில் சேத்ரி. கால்பந்தாட்டத்தை அடுத்தக் கட்டத்துக்கு எடுத்துச் சென்று, தேசத்திற்கு பெருமை சேர்த்த இவர், இந்தியாவுக்காக 145 போட்டிகளில் விளையாடி 93 கோல்கள் அடித்துள்ளார்.
Similar News
News December 2, 2025
IPL 2026: அடுத்தடுத்து விலகும் முன்னணி நட்சத்திரங்கள்!

மேக்ஸ்வெல்லை PBKS அணி தக்கவைக்காத நிலையில், அவர் தனது பெயரை IPL மினி ஏலத்திற்கு பதிவு செய்யவில்லை. இதனால் அவர் 2026 தொடரில் விளையாடமாட்டார் என கூறப்படுகிறது. அதே போல, KKR வீரர் <<18444409>>மொயின் அலி<<>>யும், PSL தொடரில் பங்கேற்க இருப்பதாக அறிவித்துள்ளார். ஆகையால், அவரும் IPL-ல் விளையாட மாட்டார். முன்னதாக, KKR-ன் ரஸல் ஓய்வை அறிவித்த நிலையில், DC-ன் டூ பிளெஸ்ஸிஸ் தொடரில் இருந்து விலகுவதாக தெரிவித்திருந்தார்.
News December 2, 2025
ஓவரா முடி கொட்டும் பிரச்னையா?

முடி கொட்டுவதற்கு வைட்டமின் குறைபாடு, மன அழுத்தம், ஹார்மோன் சமநிலையின்மை என பல காரணங்கள் உள்ளன. இவற்றில், வைட்டமின் D குறைபாடு முக்கிய காரணிகளில் ஒன்று. சூரிய ஒளி உடலுக்கு வைட்டமின் D-யை அளிக்கிறது. ஆகையால், முடி கொட்டும் பிரச்னை உள்ளவர்கள், காலையில் சிறிது நேரம் சூரிய ஒளியில் இருக்க அறிவுறுத்தப்படுகிறார்கள். அதே நேரத்தில் கொழுப்பு நிறைந்த மீன்களும், பால் உடலுக்கு வைட்டமின் D-யை கொடுக்குமாம்.
News December 2, 2025
முதல்வர் வேட்பாளர் ஆகிறாரா திமுக முக்கிய பிரபலம்?

இண்டியா கூட்டணியின் புதுச்சேரி CM வேட்பாளர், திமுகவின் ஜெகத்ரட்சகன் என தகவல் வெளியாகியுள்ளது. லாட்டரி மார்ட்டினின் மகன் ஜோஸ் சார்லஸ் தனிக்கட்சி தொடங்குவதாக அறிவித்திருக்கிறார். அவருக்கு அனைத்து வகையிலும் கடும் போட்டி கொடுக்க, சரியான ஆள் ஜெகத் தான் என கணக்குப்போடும் திமுக தலைமை, அவரை புதுச்சேரியில் களமிறக்க திட்டமிட்டுள்ளதாம். இதனால், திமுக கூட்டணியில் சலசலப்பு உருவாக வாய்ப்புள்ளது.


