News April 20, 2025

சன்டேவில் சங்கடம்: மீன்கள் விலை கிடுகிடு உயர்வு!

image

தமிழகத்தில் மீன்பிடித் தடைக்காலம் அமலில் இருப்பதால் சந்தைகளில் மீன் வரத்து குறைந்துள்ளது. இதனால், மீன்களின் விலை வழக்கத்தை விட கிலோவுக்கு குறைந்தபட்சம் ₹100 வரை அதிகரித்துள்ளது. அதுவும் விடுமுறை நாளான இன்று மீன்கள் விலை உயர்ந்திருப்பது, அசைவ பிரியர்களை சங்கடத்தில் ஆழ்த்தியுள்ளது. இதனால், கடல் உணவுகளை விரும்பி சாப்பிடுவோர் மட்டன், சிக்கனுக்கு மாறியுள்ளனர்.

Similar News

News August 19, 2025

து.ஜனாதிபதி வேட்பாளராக மயில்சாமி அண்ணாதுரை?

image

துணை ஜனாதிபதி வேட்பாளராக யாரை நிறுத்துவது என்ற ஆலோசனையில் இறங்கியுள்ளது INDIA கூட்டணி. இதற்காக, மகாத்மா காந்தியின் பேரனான துஷார் காந்தியின் பெயரை பரிந்துரைத்துள்ளாராம் NCP-ன் சரத் பவார். அதோடு, கட்சி சார்பு இல்லாத முன்னாள் இஸ்ரோ தலைவர் மயில்சாமி அண்ணாதுரையின் பெயரை திமுக பரிந்துரைத்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இதுபற்றிய இறுதி முடிவை காங்., தலைவர் கார்கே இன்று எடுக்கவுள்ளார்.

News August 19, 2025

BREAKING: டி.ஆர்.பாலுவின் மனைவி காலமானார்

image

திமுக பொருளாளர் டி.ஆர்.பாலுவின் மனைவி ரேணுகாதேவி (80) உடல்நலக் குறைவால் காலமானார். நுரையீரல் பாதிப்புக்காக கடந்த 8 மாதங்களாக சென்னை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி அவரது உயிர் பிரிந்துள்ளது. அவரின் உடலுக்கு முதல்வர் ஸ்டாலின், திமுக மூத்த தலைவர்கள் நேரில் அஞ்சலி செலுத்த உள்ளனர்.

News August 19, 2025

‘திரை தீப்பிடிக்கும்..’ ஒரே படத்தில் ரஜினி, கமல்?!

image

தொடக்கத்தில் ஒன்றாக நடித்த ரஜினியும் கமலும், பிறகு வெவ்வேறு பாதையில் சென்று விட்டனர். இந்நிலையில், இருவரையும் ஒரு படத்தில் இணைந்து நடிக்க வைக்க லோகேஷ் கனகராஜ் முயற்சி எடுத்துள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது. ‘கூலி’ படத்தின் ரிலீசுக்கு முன், இருவரையும் சந்தித்து அவர் ஒரு கதை சொன்னதாகவும், இருவருக்கும் கதை பிடித்துவிட்டதாகவும் கூறப்படுகிறது. லோகி இயக்கத்தில் ரஜினியும்- கமலும்.. எப்படி இருக்கும்?

error: Content is protected !!