News January 12, 2025

SUNDAY SPECIAL: வடசென்னை பீட்ஸா ‘அட்லாப்பம்’ 2/3

image

குற்றச்சம்பவங்களுக்கு பேர்போன இடம் என ஒருசிலர் கூறும் வடசென்னை தான், ஒரு காலத்தில் வீரர்களை உற்பத்தி செய்யும் பட்டறையாக இருந்தது. ஆம், கால்பந்து, கபடி, பாக்சிங் என அப்பகுதி இளைஞர்களுக்கு ஸ்போர்ட்ஸ் மீது அதிக ஆர்வம். காலை 4 மணிக்கு உடற்பயிற்சி மேற்கொள்ளும் அனைவரும் இந்த அட்லாப்பத்தை தான் வாங்கி சாப்பிடுவார்கள். அதில், அவ்வளவு ஊட்டச்சத்து உள்ளது. உடல்வலிமை, எனர்ஜி என உடலே கட்டுமஸ்த்தாக மாறிவிடும்.

Similar News

News August 25, 2025

சென்னை: ரூ.48,000 சம்பளத்தில் வங்கி வேலை

image

பொதுத்துறை வங்கியான பஞ்சாப் & சிந்து வங்கியில் காலியாக உள்ள உள்ளுர் வங்கி அதிகாரிகள் பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். சம்பளமாக ரூ.48,000 முதல் ரூ.85,000 வரை வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. விண்ணப்பிக்க <>இங்கு<<>> கிளிச் செய்யவும். செப்.7-ம் தேதி கடைசி ஆகும். நல்ல சம்பளத்தில் வேலை தேடும் நபர்களுக்கு SHARE பண்ணுங்க.

News August 25, 2025

சென்னை: What’s App இருக்கா! உஷார்

image

வியாசர்பாடி பகுதியைச் சேர்ந்த போக்குவரத்து காவலர் சுரேஷ்குமார். இவருக்கு What’s App-ல் மெசேஜ் ஒன்று வந்தது. அது பைல் வடிவில் இருந்ததால், அதை அவர் கிளிக் செய்தார். இதனையடுத்து அவரது வங்கிக்கணக்கில் இருந்து ரூ.1.20 லட்சம் எடுக்கப்பட்டதாக SMS வந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். தொடர்ந்து யுபிஐ பயனர்களை குறிவைத்து பணமோசடி நடந்து வருவதால் கவனமாக இருக்க சைபர் க்ரைம் எச்சரிக்கை விடுத்துள்ளது. (SHARE)

News August 25, 2025

சென்னையில் 41,000க்கும் மேற்பட்ட தெருவிளக்குகள் செயலிழப்பு

image

சென்னை மாநகராட்சி ஆய்வில் 41,000க்கும் மேற்பட்ட தெருவிளக்குகள் இயங்கவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. வடக்கு பிராந்தியத்தில் (மண்டலம் 1–5) 10,937, மத்திய பிராந்தியத்தில் (6–10) 19,816, தெற்கு பிராந்தியத்தில் (11–15) 9,935 விளக்குகள் பழுதடைந்துள்ளன. குறிப்பாக கிண்டி, கோட்டூர்புரம், எக்காட்டுத்தாங்கல், மவுண்ட் ரோடு, பாரதிநகர் பகுதிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக தரவுகள் கூறுகின்றன.

error: Content is protected !!