News May 2, 2024
உலக பணக்காரர்கள் பட்டியலில் சுந்தர் பிச்சை

கூகுள் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரியான சுந்தர் பிச்சை, உலகளவில் அதிக சம்பளம் வாங்கும் இந்தியத் தலைமை நிர்வாக அதிகாரியாகத் திகழ்கிறார். கடந்த ஆண்டு அவரின் ஆண்டு சம்பளம் ₹1,869 கோடியாக இருந்ததால், உலகின் பெரும் பணக்காரர்கள் பட்டியலில் இணைந்துள்ளார். சுந்தர் பிச்சையின் ஆண்டு சம்பளம் முகேஷ் அம்பானியின் சம்பளத்தை விட அதிகமாக இருக்கும் நிலையில், அவரின் சொத்து மதிப்பு ₹8,342 கோடியாக உள்ளது.
Similar News
News September 21, 2025
Baby Bump-உடன் கத்ரீனா❤️❤️! PHOTO

பாலிவுட் ஸ்டார் தம்பதிகள் விக்கி கௌஷல் & கத்ரீனா கைஃப் விரைவில் பெற்றோராக உள்ளனர். இத்தகவல் முன்னரே வெளியாகிவிட்ட சூழலில். தற்போது கத்ரீனா ‘Baby Bump’-உடன் போட்டோஷூட் ஒன்றை நடத்தியுள்ளார். இத்தம்பதிகளுக்கு வரும் அக்டோபர் அல்லது நவம்பரில் குழந்தை பிறக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இருவருக்கும் கடந்த 2021 டிசம்பர் மாதத்தில் திருமணம் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.
News September 21, 2025
விஜய் பேச்சு அனைத்தும் பொய்: ஆளூர் ஷாநவாஸ்

நாகை பரப்புரையின்போது விஜய் பேசியது அனைத்தும் பொய் என்று விசிக MLA ஆளூர் ஷாநவாஸ் விமர்சித்துள்ளார். பத்திரிகையாளர்களை சந்திக்க துணிச்சல் இல்லாத விஜய், அண்ணாமலை, ஆர்.என்.ரவியை போன்று அவதூறு அரசியல் செய்வதாக சாடினார். மேலும், அவதூறான இட்டுக்கட்டிய பொய்களையும், வாய்க்கு வந்ததையும் பேசுவதை நிறுத்திவிட்டு, தவெக கொள்கையை முதலில் தெரிவிக்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.
News September 21, 2025
USA-வில் உள்ள இந்தியர்களுக்கு அவசர உதவி எண் அறிவிப்பு

USA-வின் H-1B விசா பெறுவதற்கான விண்ணப்ப கட்டணம் ₹88 லட்சமாக உயர்த்தப்பட்டதால் இருநாடுகளுக்கு இடையேயான உறவு பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், USA-வில் அவசர உதவி தேவைப்படும் இந்தியர்களுக்காக இந்திய தூதரகம் உதவி எண் அறிவித்துள்ளது. அவசர உதவிகள் தேவைப்பட்டால் மட்டும் +12025509931 என்ற எண்ணுக்கு அழைக்கலாம் எனவும் தகவல்களை விசாரிக்க ஃபோன் செய்ய வேண்டாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.