News August 10, 2024
‘மூக்குத்தி அம்மன் 2’ படத்தை இயக்கும் சுந்தர்.சி?

2020ஆம் ஆண்டில் RJ பாலாஜி இயக்கத்தில் ‘மூக்குத்தி அம்மன்’ படம் வெளியானது. மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற அதன் 2ஆம் பாகத்தை வேல்ஸ் பிலிம் இன்டர்நேஷனல் நிறுவனம் தயாரிக்கவுள்ளது. அந்தப் படத்தை இயக்க சுந்தர்.சி ஒப்புக்கொண்டுள்ளதாகவும், முதல் பாகத்தில் அம்மனாக நடித்த நயன்தாராவே இதிலும் நடிப்பார் எனவும் தகவல் வெளியாகியுள்ளது. இது குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என கூறப்படுகிறது.
Similar News
News October 21, 2025
இந்திய அணியின் அரையிறுதி வாய்ப்பு எப்படி?

Women’s CWC-ல், இந்தியா ஹாட்ரிக் தோல்வியை தழுவியதால் அரையிறுதி வாய்ப்பு மங்கியுள்ளது. அடுத்ததாக நியூசிலாந்து, வங்கதேசத்தை எதிர்கொள்ளும் இந்தியா, அவற்றில் வென்றால் அரையிறுதிக்கு தகுதி பெறும். நியூசிலாந்திடம் தோற்றாலும் ரன் ரேட்டை பாஸிட்டிவாக தக்க வைத்தால் வங்கதேசத்துடன் வெற்றி பெறுவது போதுமானது. 2 போட்டிகளிலும் தோற்றால், நியூசிலாந்து 4-வது அணியாக அரையிறுதிக்கு முன்னேறும்.
News October 20, 2025
சர்க்கரை நோயை கட்டுக்குள் கொண்டு வர இதை பண்ணுங்க

சர்க்கரை நோயை மருந்து மாத்திரைகள் மூலமாக மட்டுமே கட்டுப்படுத்த முடியாது. அதற்கு சரியான உணவுகளை எடுத்துக் கொள்வதும் அவசியம். குறைவான கிளைசெமிக் எண் கொண்ட உணவுகளை சாப்பிடுவதால், ரத்தத்தில் சர்க்கரை அளவை கட்டுப்படுத்துவதுடன், நீண்ட கால ஆரோக்கியத்தையும் பெறலாம். அந்த வகையில், நிபுணர்கள் பரிந்துரைக்கும் உணவுகளை மேலே போட்டோக்களை Swipe செய்து தெரிந்து கொள்ளுங்கள்.
News October 20, 2025
தீபாவளியன்று அயராத பணியில் நல் உள்ளங்கள்

தீபாவளி பண்டிகையை நாமெல்லாம் உற்சாகத்துடன் கொண்டாடும் வேளையில், குறிப்பிட்ட சில துறையை சேர்ந்தவர்கள் விடுப்பின்றி பணி செய்கின்றனர். டாக்டர்கள், மருத்துவ பணியாளர்கள், தூய்மை பணியாளர்கள், போக்குவரத்து ஊழியர்கள், மின்வாரிய ஊழியர்கள், போலீஸ், தீயணைப்பு துறையினர் இன்று அர்ப்பணிப்போடு கடமையை செய்து வருகின்றனர். நமக்காக பணியாற்றும் இந்த நல் உள்ளங்களுக்காக லைக் போட்டு நன்றி தெரிவிக்கலாமே.