News September 14, 2024
வெயில் சுட்டெரிக்கும்: RMC

தமிழகத்தில் ஓரிரு இடங்களில் இன்றும், நாளையும் வெப்பம் அதிகரிக்கக்கூடும் என்று சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதிகபட்ச வெப்பநிலை இயல்பை விட 2°-3° செல்சியஸ் அதிகமாக இருக்கக்கூடும் என்றும் RMC குறிப்பிட்டுள்ளது. இதேபோல், அதிக வெப்பநிலை மற்றும் அதிக ஈரப்பதம் இருக்கும்போது அசௌகரியம் ஏற்படக்கூடும் என்றும் RMC கூறியுள்ளது. உங்கள் பகுதியில் வெயில் எப்படி? கமெண்ட் பதிவிடுங்க
Similar News
News December 7, 2025
ஆறுபடையப்பனை மீண்டும் பார்க்க ரெடியா?

தியேட்டர்களில் சக்கைப்போடு போடும் ரீ-ரிலீஸ் படங்களின் வரிசையில் ரஜினியின் சூப்பர் ஹிட் படமும் இணைகிறது. 1999-ல் வெளியான ‘படையப்பா’ படம் ரஜினியின் பிறந்தநாளான வரும் 12-ம் தேதி ரீ-ரிலீஸ் செய்யப்பட உள்ளது. ரஜினியின் அதிரடி நடிப்பு, ஸ்டைல் மற்றும் ரம்யா கிருஷ்ணனின் நீலாம்பரி கதாபாத்திரம் இன்றளவும் பேசப்படுகிறது. 80s, 90s கிட்ஸ்க்கு கூஸ்பம்ஸ் கொடுக்கும் படையப்பாவை மீண்டும் தியேட்டரில் பார்க்க ரெடியா?
News December 7, 2025
ரோஹித், விராட் வரிசையில் இணைந்த ஜெய்ஸ்வால்

தென்னாப்பிரிக்காவுக்கு இடையேயான தொடரில் சதம் அடித்ததன் மூலம் புதிய சாதனையை ஜெய்ஸ்வால் படைத்துள்ளார். 3-வடிவிலான கிரிக்கெட் போட்டிகளிலும் சதம் அடித்த இந்திய வீரர்கள் பட்டியலில் ஜெய்ஸ்வாலும் இணைந்துள்ளார். இந்த சாதனையை முதலில் படைத்த இந்திய வீரர் சுரேஷ் ரெய்னா. இதனை தொடர்ந்து ரோஹித், ராகுல், விராட், கில் ஆகியோர் இந்த பட்டியலில் இணைந்தனர்.
News December 7, 2025
79 ஆண்டுகளாகியும் நீடிக்கும் காலனித்துவ மனநிலை: PM

சுதந்திரம் பெற்று 79 ஆண்டுகளுக்கு பிறகும், நாம் காலனித்துவ மனப்பான்மையில் இருந்து விடுபடவில்லை என PM மோடி தெரிவித்துள்ளார். 2035-ல் நாம் 200 ஆண்டுகால காலனித்துவத்தை நிறைவு செய்கிறோம். எனவே அடுத்த 10 ஆண்டுகளில், இந்தியாவின் ஒவ்வொரு மூலையில் இருந்தும் காலனி மனோபாவத்தை விடுவிக்க வேண்டும் என்று அவர் கூறியுள்ளார். மெக்காலே கல்வி கொள்கை அறிமுகப்படுத்தப்பட்ட 1835-ம் ஆண்டை தான் PM குறிப்பிடுகிறார்.


