News July 24, 2024

யூடியூபர் துருவ் ரதிக்கு சம்மன்

image

பிரபல யூடியூபர் துருவ் ரதி மீது, பாஜகவைச் சேர்ந்த சுரேஷ் கரம்ஷி நகுவா ₹20 லட்சம் கேட்டு அவதூறு வழக்கு தொடர்ந்தார். தன்னை வன்முறை மற்றும் அத்துமீறல் ட்ரோல்களை செய்வதாக வீடியோ வெளியிட்டு நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தியதாக அவர் தன் மனுவில் கூறியிருந்தார். இந்த வழக்கு விசாரணையின் போது டெல்லி நீதிமன்றம் துருவ் ரதிக்கு சம்மன் அனுப்பியுள்ளது. ஆகஸ்ட் 6ஆம் தேதி வழக்கு மீண்டும் விசாரணைக்கு வர உள்ளது.

Similar News

News March 5, 2026

திமுக – காங்கிரஸில் இன்னும் இந்த சிக்கல் இருக்குதா?

image

திமுக-காங்., இடையே ஏற்பட்டிருக்கும் கூட்டணி உடன்பாடு வெறும் பேப்பரில் மட்டுமே இருப்பதாக அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர். இவ்வளவு நாள் தவெகவுடன் காங்., திரைமறைவில் பேச்சுவார்த்தை நடத்தியதே அதற்கு காரணம் என்கின்றனர். இதனால், காங்கிரஸ் மீது திமுகவுக்கு நம்பிக்கை குறைந்திருக்கலாம் எனவும் இதனால் இந்த கூட்டணி அடுத்துவரும் தேர்தல்களில் கைகோர்க்குமா என்பது சந்தேகமே என கூறி வருகின்றனர்.

News March 5, 2026

வங்கி கணக்கில் ₹11,000… முதல்வர் அறிவித்தார்

image

புதுச்சேரியிலும் தேர்தல் வரவிருக்கும் நிலையில், அம்மாநில முதல்வர் ரங்கசாமி அடுத்தடுத்த அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறார். அதன்படி, பயிறு வகைகள், எள்ளுக்கு ₹6,000, பாரம்பரிய நெல், வேர்க்கடலைக்கு ₹7,000, கரும்பு, பருத்தி உற்பத்தி செய்வோருக்கு மானியமாக ₹11,000 வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த உயர்த்தப்பட்ட மானியம் 2026 -27 முதல் அமலுக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

News March 5, 2026

படிக்க காசு இல்லையா? இதோ அரசு திட்டம்!

image

உயர்கல்வி படிக்க வசதியில்லாத மாணவர்களுக்கு ₹10 லட்சம் வரை பிணையம் இல்லாமல் கடன் வழங்குகிறது மத்திய அரசின் PM வித்யாலட்சுமி கல்விக் கடன் திட்டம். மெரிட்டின் அடிப்படையில் சீட் பெறும் மாணவர்களுக்கு மட்டுமே கடன் வழங்கப்படும். வாங்கிய கடனை செலுத்தமுடியாமல் போனால், வட்டியில் 3% மானியம் வழங்கப்படும். இத்திட்டத்தில் பயன்பெற இங்கே <>க்ளிக்<<>> பண்ணுங்க. பிள்ளைகளின் படிப்புக்கு உதவும் இத்தகவலை SHARE பண்ணுங்க.

error: Content is protected !!