News May 29, 2024
நயினார் நாகேந்திரனுக்கு சம்மன்

ரயிலில் ₹4 கோடி பறிமுதல் செய்யப்பட்ட வழக்கில் 4 பேருக்கு சிபிசிஐடி போலீசார் சம்மன் அனுப்பியுள்ளனர். இவ்வழக்கில் பணத்தை எடுத்துச்சென்றவர்கள் நயினார் நாகேந்திரனின் எம்எல்ஏ கோட்டா டிக்கெட்டில் பயணித்தது கண்டுபிடிக்கப்பட்டது. தொடர்ந்து, விசாரணை தீவிரப்படுத்தப்பட்ட நிலையில், பாஜகவை சேர்ந்த நயினார் நாகேந்திரன், கேசவ விநாயகம் உட்பட 4 பேர் மே 31இல் சிபிசிஐடி அலுவலகத்தில் ஆஜராக சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.
Similar News
News November 26, 2025
புள்ளிகள் பட்டியலில் சறுக்கிய இந்திய அணி

தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக ஒயிட்வாஷ் ஆனதால், டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளி பட்டியலில் இந்திய அணி 5-வது இடத்திற்கு சறுக்கியுள்ளது. 9 போட்டிகளில் விளையாடியுள்ள இந்தியா 4 வெற்றி, 4 தோல்வி, ஒரு டிரா என 48.15% புள்ளிகள் மட்டுமே எடுத்துள்ளது. 25 ஆண்டுகளுக்கு பிறகு இந்திய மண்ணில் டெஸ்ட் தொடரை கைப்பற்றியுள்ள தென்னாப்பிரிக்கா, புள்ளி பட்டியலில் 2-வது இடத்தை தக்கவைத்துள்ளது. இந்தியா கோட்டைவிட்டது எங்கே?
News November 26, 2025
கவர்னர் திமிரை அடக்கணும்: CM ஸ்டாலின்

அமைதிப்பூங்காவாக இருக்கும் தமிழ்நாட்டை தீவிரவாத மாநிலம் என கவர்னர் திமிரெடுத்து பேசியிருப்பதாக CM ஸ்டாலின் சாடியுள்ளார். கவர்னரின் திமிரை அடக்க வேண்டும் என்ற அவர், தீவிரவாத தாக்குதலில் மக்கள் பலியாவதை தடுக்கமுடியாத பாஜக ஆட்சியை அவர் புகழ்ந்து பேசுவதாகவும் விமர்சித்துள்ளார். மேலும், தமிழர்களை தேசவிரோதிகள் என சித்தரிக்கும் கவர்னரின் பேச்சு கண்டிக்கத்தக்கது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
News November 26, 2025
டெஸ்டில் இந்தியாவின் மிக மோசமான தோல்வி இதுவே!

தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான 2-வது டெஸ்ட் போட்டி, இந்திய அணிக்கு மறக்க முடியாத வடுவாக மாறியுள்ளது. டெஸ்ட் போட்டியில் ரன்களின் அடிப்படையில், இந்திய அணி அடைந்த மிகப்பெரிய தோல்வி இதுவே. இதற்கு முன்பாக, 2004-ம் ஆண்டு ஆஸி.,க்கு எதிராக 342 ரன்கள் வித்தியாசத்தில் தோற்றதே மோசமான தோல்வியாக இருந்தது குறிப்பிடத்தக்கது. இன்றைய தோல்விக்கு என்ன காரணம் என நினைக்கிறீங்க?


