News April 26, 2024
முக்கிய வழக்குகளில் மட்டுமே அரசு அதிகாரிகளுக்கு சம்மன்

முக்கிய வழக்குகளில் மட்டுமே அரசு அதிகாரிகளுக்கு சம்மன் அனுப்ப வேண்டுமென்று நீதிமன்றங்களுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கொல்கத்தா உயர்நீதிமன்றம் சம்மன் அனுப்பியதை எதிர்த்து, மேற்கு வங்க அரசு தொடுத்த மனுவை விசாரித்த நீதிபதிகள், முதலில் வீடியோ கான்ஃப்ரன்சிங் மூலம் விசாரிக்க வேண்டும், பிறகு தேவை ஏற்பட்டால் சம்மன் அனுப்பலாமென கூறி, உயர்நீதிமன்ற உத்தரவை தள்ளுபடி செய்தனர்.
Similar News
News September 19, 2025
BREAKING: விஜய் வீட்டில் அதிகாலையில் பரபரப்பு

சென்னை நீலாங்கரையில் உள்ள விஜய் வீட்டின் மாடியில் அமர்ந்திருந்த இளைஞரால் அதிகாலையில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. பாதுகாப்பு வளையங்களை தாண்டி வீட்டின் மொட்டை மாடிக்கு அந்த இளைஞர் சென்றது எப்படி என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். அரசியல் கட்சி தொடங்கிய பிறகு உள்துறை அமைச்சகம் அவருக்கு ‘Y’ பாதுகாப்பு வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.
News September 19, 2025
புடின் என்ன ஏமாற்றிவிட்டார்: டிரம்ப்

ரஷ்யா-உக்ரைன் போர் நிறுத்த விஷயத்தில் புடினின் நடவடிக்கையால் ஏமாற்றம் அடைந்திருப்பதாக டிரம்ப் தெரிவித்துள்ளார். ரஷ்யா-உக்ரைன் போரை நிறுத்துவதுதான் மிக எளியது என நினைத்ததாகவும், தான் அதிபராக இருந்திருந்தால் 4 ஆண்டுகளுக்கு இந்த போர் தொடர்ந்திருக்காது எனவும் கூறினார். என்ன ஆனாலும் போர்நிறுத்த முயற்சிகள் மேற்கொள்ளப்படும் என கூறிய அவர், இஸ்ரேல்-காஸா போரும் முடிவுக்கு வரும் என கூறியுள்ளார்.
News September 19, 2025
மழை சீசனில் சளி, இருமல் தொல்லையை விரட்டும் தேநீர்!

சளி, இருமல், தொண்டை வலி ஆகியவை நீங்க, அதிமதுரம் டீ தான் பெஸ்ட் *ஒரு பாத்திரத்தில் ஒரு டம்ளர் தண்ணீரை எடுத்து, அதில் அதிமதுரம் தூள் அல்லது ஒரு துண்டை சேர்க்கவும் *அதை 5-7 நிமிடங்கள் மிதமான தீயில் கொதிக்க விடவும் *பின்னர், அதை வடிகட்டி ஒரு டம்ளரில் ஊற்றி, தேவைக்கேற்ப நாட்டுச் சர்க்கரை அல்லது தேன் கலந்தால், சுவையான அதிமதுரம் டீ ரெடி! இந்த பயனுள்ள தகவலை உங்களின் நண்பர்களுக்கும் பகிரவும்.