News May 1, 2024

பிரஜ்வால் ரேவண்ணாவுக்கு சம்மன்

image

பாலியல் புகாரில் சிக்கிய கர்நாடக எம்.பி பிரஜ்வாலுக்கும், அவரது தந்தை ரேவண்ணாவுக்கும் சிறப்பு புலனாய்வுக் குழு சம்மன் அனுப்பியுள்ளது. மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சியில் இருந்து பிரஜ்வால் நேற்று இடைநீக்கம் செய்யப்பட்டார். அவரை கைது செய்ய கர்நாடக டிஜிபிக்கு தேசிய மகளிர் ஆணையமும் பரிந்துரைத்துள்ளது. பிரஜ்வால் தற்போது ஜெர்மனியில் உள்ளதால் அவர் விசாரணைக்கு ஆஜராக வாய்ப்பில்லை எனத் தெரிகிறது.

Similar News

News April 6, 2026

₹40,000 சம்பளம், 667 காலியிடங்கள்.. இன்றே கடைசி!

image

மத்திய அரசின் கீழ் செயல்படும் மகாநதி நிலக்கரி நிறுவனத்தில் 667 காலி பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. மைனிங், சர்வேயர் உள்ளிட்ட பணிகளுக்கு +2, டிப்ளமோ கல்வித்தகுதி போதுமானது. ஆன்லைன் தேர்வு, சான்றிதழ் சரிபார்ப்பு அடிப்படையில் ஆட்கள் தேர்வு செய்யப்படுவர். ₹40,000-க்கு மேல் சம்பளம் வழங்கப்படும். 18-30 வயதுக்குட்பட்டவர்கள் இந்த <>லிங்க்கில்<<>> ஏப்.6-ம் தேதிக்குள் விண்ணப்பிக்கவும். SHARE.

News April 6, 2026

மேட்ச் தோற்றாலும் CSK-ன் மாஸ் ரெக்கார்டு!

image

பொதுவாக IPL அதிக ரன்களை விளாசும் அணிகள் எது என்று கேட்டால், பல ரசிகர்களும் SRH, RCB, MI போன்ற அணிகளை குறிப்பிடுவார்கள். ஆனால், அதிகமுறை 200+ ரன்களை விளாசியுள்ளது CSK தான். நேற்றைய RCB-க்கு எதிரான 207 ஸ்கோரையும் சேர்த்து, இதுவரை 37 முறை CSK 200+ ரன்களை விளாசி உள்ளது. இந்த பட்டியலில் 2-வது இடத்தில் RCB(36), 3-வது இடத்தில் PBKS(33), 4-வது இடத்தில் MI(32) ஆகிய அணிகள் உள்ளன.

News April 6, 2026

தேர்தல் புறக்கணிப்பு.. அடுத்த சர்ச்சை வெடித்தது!

image

திமுக ஆட்சியில் தமிழ்நாட்டையே உலுக்கிய விவகாரம் என்றால் வேங்கைவயல் பிரச்னைதான். இந்நிலையில், குடிநீர் தொட்டியில் மனித கழிவு கலக்கப்பட்ட விவகாரத்தில் நீதி கிடைக்காததை கண்டித்தும், பாதிக்கப்பட்டோரையே குற்றவாளிகளாக சித்தரிப்பதை கண்டித்தும் வரும் சட்டப்பேரவை தேர்தலை புறக்கணிப்பதாக வேங்கைவயல் பட்டியலின மக்கள் அறிவித்துள்ளனர். இந்த தேர்தல் புறக்கணிப்பு திமுகவை வீழ்த்தும் என அன்புமணி கூறியுள்ளார்.

error: Content is protected !!