News April 18, 2025

கோடை விடுமுறை.. வெளியூர் செல்வோருக்கு சிறப்பு சலுகை

image

கோடை கால விடுமுறைக்கு வெளியூர்களுக்கு பயணம் செய்யும் பயணிகளுக்கு TNSTC சிறப்பு சலுகையை அறிவித்துள்ளது. ஆம்! ஆன்லைன் முன்பதிவு திட்டத்தின் வழியாக முன்பதிவு செய்யும் பயணிகளை ஊக்குவிக்கும் வகையில், பயணச்சீட்டு முன்பதிவு செய்து, 01/04/2025 முதல் 15/06/2025 வரை பயணம் மேற்கொள்ளும் பயணிகளில், 75 பயணிகளை கணினி சிறப்பு குலுக்கல் முறையில் தேர்வு செய்து சிறப்பு பரிசுகள் வழங்கப்படும் என அறிவித்துள்ளது.

Similar News

News April 19, 2025

வீட்டில் சிலிண்டர் சீக்கிரம் காலியாவதை தடுக்க…

image

◆அரிசி, பருப்பு, சுண்டல் போன்றவற்றை நீரில் ஊற வைத்து, அடுப்பில் வைத்தால் சீக்கிரமாக வெந்து விடும் ◆சின்ன வளைவான பாத்திரங்களை பயன்படுத்தினால், தீ வேகமாக பரவி சமையல் சீக்கிரம் முடியும் ◆அடுப்பின் பர்னர் சுத்தமாக இருக்கிறதா என்பதை கவனியுங்கள் ◆பாத்திரங்களை கழுவியவுடன், ஈரத்தோட அடுப்பில் வைக்காதீர்கள் ◆ஃபிரிட்ஜில் இருந்து எடுத்த காய்கறிகளை சிறிது நேரம் வெளியில் வைத்துவிட்டு உபயோகப்படுத்தவும்.

News April 19, 2025

இந்த வாரம் முடிவுக்கு வந்த தங்கம் விலை!

image

தங்கம் விலை இந்த வாரத்தில் ஜெட் வேகத்தில் உயர்ந்த வந்த நிலையில், இன்று (ஏப்.19) மாற்றமின்றி விற்பனையாகிறது. இந்த வாரத்தில் 1 கிராம் 225 ரூபாயும், சவரன் 1,800 ரூபாயும் உயர்ந்துள்ளது. இந்நிலையில், இன்று மாற்றமின்றி 1 கிராம் ₹8,945-க்கும், ₹71,560-க்கும் விற்பனையாகிறது. நாளையும் இதே விலைதான் என்பதால் ஒரு ஸ்பீடு பிரேக் போடப்பட்டுள்ளது என நெட்டிசன்கள் கமெண்ட் செய்து வருகின்றனர். உங்க கருத்து என்ன?

News April 19, 2025

பலத்த காற்றுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு!

image

தென்னிந்தியாவின் மேல் வளிமண்டல கீழடுக்கு பகுதிகளில், கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கிறது. இதனால், தமிழகம், புதுச்சேரி, காரைக்காலில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் (IMD) கணித்துள்ளது. அதேநேரம் ஓரிரு இடங்களில் வழக்கத்தை விட 3 டிகிரி வரை வெயில் அதிகமாக இருக்கும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. வெளியே செல்லும் போது குடையோடு போங்க மக்களே.!

error: Content is protected !!