News March 24, 2025
Summer Tips: வாழைப்பழம் ஃபேஸ் பேக்

*ட்ரை ஸ்கின் கொண்டவர்களின் முகத்தை கூலாக்கும் ஃபேஸ் பேக் இது. *தேவை: மசித்த வாழைப்பழம்- 1/2 கப், தேன்- 1 Tbs.
*செய்முறை: மசித்த வாழைப்பழத்தை எடுத்து, அதில் 1 Tbs தேன் சேர்த்து, அந்த கலவையை முகம் மற்றும் கழுத்துப் பகுதியில் தடவி, நன்கு உலர விடவும். பின், வெதுவெதுப்பான நீரால் கழுவ வேண்டும். இந்த மாஸ்கினால் சருமத்திற்கு போதிய நீர்ச்சத்து கிடைத்து, சருமம் வறட்சி அடைவது தடுக்கப்படும்.
Similar News
News December 6, 2025
BREAKING: இந்தியா பந்துவீச்சு

தெ.ஆப்., அணிக்கு எதிரான 3-வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டியில் இந்தியா அணி பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது. இந்திய அணியில், ஜெய்ஸ்வால், ரோஹித் சர்மா, கோலி, ருதுராஜ், கே.எல்.ராகுல், ஜடேஜா, குல்தீப், ராணா, அர்ஷ்தீப் சிங், பிரசித் கிருஷ்ணா ஆகியோர் இடம் பெற்றுள்ளனர். டெஸ்ட் தொடரை பறிகொடுத்த நிலையில், இந்தியா கடைசி போட்டியான இன்று வெற்றிபெற்று தொடரை கைப்பற்ற தீவிரமாக களமிறங்கவுள்ளது.
News December 6, 2025
முருகன் இப்போதுதான் தெரிகிறாரா? சீமான்

பல கோடி மக்கள் வாழ்வில் விளக்கின்றி இருளில் கிடக்கும் நிலையில், திருப்பரங்குன்றம் மலையில் விளக்கேற்ற துடிக்கின்றனர் என சீமான் விமர்சித்துள்ளார். மலைகள் கல்குவாரிகளாக மாற்றப்பட்ட போது ஏன் அவர்கள் வரவில்லை என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார். பாஜக உள்ளிட்ட ஹிந்துத்துவா அமைப்புகளுக்கு இன்று தான் முருகன் கண்ணுக்கு தெரிகிறாரா என்றும் சீமான் கேட்டுள்ளார்.
News December 6, 2025
மதுரை புதிய மேம்பாலத்திற்கு வேலுநாச்சியார் பெயர்

மதுரை மேலமடை சந்திப்பு சாலையில் புதிதாக கட்டப்பட்டுள்ள மேம்பாலத்திற்கு வீரமங்கை வேலுநாச்சியார் பெயர் சூட்டப்படுவதாக CM ஸ்டாலின் அறிவித்துள்ளார். பிரிட்டிஷ் ஆட்சியில் ஆங்கிலேயர்களை எதிர்த்து போரிட்ட வீரமங்கையின் பெயரை சூட்டுவதில் தனக்கு பெருமை என்றும் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். ₹150.28 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள இந்த மேம்பாலம், 950 மீ., நீளம் கொண்டது.


