News March 29, 2025
கோடை வெயில்: அதிகரிக்கும் சரும பாதிப்புகள்

கோடை வெயில் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால், மக்கள் சொல்ல முடியாத துயரத்திற்கு ஆளாகியுள்ளனர். குறிப்பாக, சின்னம்மை, உயர் ரத்த அழுத்தம், நீர்ச் சத்து இழப்பு, சரும பாதிப்புகள் பரவலாக மக்களிடையே காணப்படுகின்றனர். நீர்க்கடுப்பு எனப்படும் சிறுநீர்ப் பாதை தொற்றும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. இதனால், நாள்தோறும் நூற்றுக்கும் மேற்பட்டோர் மருத்துவமனைகளை நாடுவதாக கூறப்படுகிறது.
Similar News
News December 9, 2025
அமெரிக்காவில் இந்திய அரிசிக்கு புதிய வரியா?

இந்திய பொருள்களுக்கு USA-வில் ஏற்கெனவே 50% வரி விதிக்கப்பட்ட நிலையில், இந்திய அரிசிக்கு புதிய வரி விதிக்க பரிசீலிப்பதாக டிரம்ப் தெரிவித்துள்ளார். இந்திய அரசு மானியங்கள் வழங்கி, USA சந்தையில் அரிசியை குறைந்த விலைக்கு விற்பதால், நஷ்டம் ஏற்படுவதாக USA விவசாயிகள் டிரம்ப்பிடம் புகார் தெரிவித்துள்ளனர். இதனை ‘ஏமாற்று வேலை’ என்று விமர்சித்த டிரம்ப், புதிய வரி விதிக்க திட்டமிட்டுள்ளார்.
News December 9, 2025
இன்னும் சற்றுநேரத்தில் தவெகவில் இணைகிறார்கள்

புதுச்சேரியில் விஜய் பங்கேற்கும் பொதுக்கூட்டம் இன்னும் சற்றுநேரத்தில் தொடங்கவிருக்கிறது. இந்நிலையில், புதுச்சேரி செல்லும் விஜய்க்கு பிரமாண்ட வரவேற்பு அளிக்க கட்சியினர் முடிவெடுத்துள்ளனர். குறிப்பாக, சமீபத்தில் தவெகவில் இணைந்த சாமிநாதன் (புதுச்சேரி பாஜக முன்னாள் தலைவர்), கே.ஏ.யு.அசனா (அதிமுக முன்னாள் MLA) ஆகியோர், தங்களின் ஆதரவாளர்களை விஜய் முன்னிலையில் தவெகவில் இணைக்கவிருப்பதாக கூறப்படுகிறது.
News December 9, 2025
இதெல்லாம் பண்றீங்களா? கிட்னிக்கு பேராபத்து!

உட்கார்ந்தே இருப்பது, தண்ணீர் அருந்துவதையே மறப்பது, நைட் ஷிஃப்டில் பணிபுரிவதால் கிட்னி ஸ்டோன் உருவாகும் ஆபத்து 15% அதிகமாகும் என ஆய்வுகளில் தெரியவந்திருக்கிறது. இதனை தவிர்க்க உடற்பயிற்சி செய்வது, போதுமான அளவு தண்ணீர் குடிப்பது, நார்ச்சத்து நிறைந்த உணவுகளை உட்கொள்வது அவசியம் என டாக்டர்கள் அறிவுறுத்துகின்றனர். நைட் ஷிஃப்ட் பார்ப்பவர்கள் உள்பட அனைவருக்கும் இத SHARE பண்ணுங்க.


