News April 11, 2024
மான்டி கார்லோ மாஸ்டர்ஸில் சுமித் நாகல் தோல்வி

மான்டி கார்லோ மாஸ்டர்ஸ் டென்னிஸ் தொடரில் இந்தியாவின் சுமித் நாகல் தோல்வியை தழுவினார். பிரான்சில் நடைபெற்ற ஆடவர் ஒற்றையர் பிரிவு 2ஆவது சுற்று போட்டியில், உலக தரவரிசையில் 7ஆவது இடத்தில் உள்ள டென்மார்க்கின் ஹோல்கர் ரூனை எதிர்கொண்ட சுமித் நாகல், 3-6 6-3 2-6 என்ற செட் கணக்கில் தோல்வியடைந்தார். 49 ஆண்டுகளுக்கு பிறகு மான்டி கார்லோ தொடரில் விளையாடிய முதல் இந்தியர் என்ற பெருமை சுமித் நாகலையே சேரும்.
Similar News
News November 13, 2025
முடிவுக்கு வருகிறது அமெரிக்க அரசின் முடக்கம்

USA-வில் காப்பீட்டு திட்டத்தின் மானியங்களை விடுவிப்பது தொடர்பான மோதலில் அரசுக்கான நிதி விடுவிக்கப்படாமல் இருந்தது. இதனால் அரசு முடங்கியது. இந்நிலையில், அமெரிக்க பிரதிநிதிகள் சபை, அந்நாட்டின் மிக நீண்ட அரசு முடக்கத்தை முடிவுக்கு கொண்டு வரும் நிதி மசோதா மீது வாக்களிப்பை தொடங்கியது. ஜனநாயக கட்சி எதிர்த்தாலும், குடியரசு கட்சி 213-209 என்ற வாக்குகளில் மசோதாவை இறுதி வாக்கெடுப்புக்கு நகர்த்தியுள்ளது.
News November 13, 2025
அஜித்குமார் வழக்கு: ஜாமீன் வழங்க சிபிஐ எதிர்ப்பு

போலீஸ் விசாரணையில் மரணமடைந்த அஜித்குமார் வழக்கில், கைதான தனிப்படை காவலர்கள் பிரபு, ஆனந்த், ராஜா ஆகியோர் ஜாமீன் கேட்டு மதுரை கோர்ட்டில் மனு தாக்கல் செய்தனர். இந்த வழக்கு விசாரணைக்கு வந்த போது 3 பேருக்கும் ஜாமீன் வழங்க ஆட்சேபம் தெரிவித்து சிபிஐ தரப்பில் மனு செய்யப்பட்டது. இதையடுத்து மனு மீதான விசாரணையை நவ.19-க்கு தள்ளி வைத்து நீதிபதி உத்தரவிட்டார்.
News November 13, 2025
தேவநாதனை கைது செய்ய தீவிரம்

நிதி நிறுவனம் நடத்தி ₹500 கோடிக்கு மேல் மோசடி செய்த வழக்கில், அரசியல் தலைவரும், பாஜக ஆதரவாளருமான தேவநாதன் யாதவ் நிபந்தனை ஜாமீன் பெற்று வெளியே வந்தார். ஆனால், ஜாமீன் நிபந்தனைப்படி ₹100 கோடி வைப்புத்தொகை செலுத்தாததால், அவரை உடனே கைது செய்ய வேண்டும் என்று நேற்று கோர்ட் அதிரடியாக உத்தரவிட்டது. இந்நிலையில், இன்னும் சற்றுநேரத்தில் அவரை கைது செய்ய போலீஸ் தீவிரம் காட்டி வருவதாக கூறப்படுகிறது.


