News April 12, 2025
அகாலிதளம் தலைவராக சுக்பீர் சிங் பாதல் மீண்டும் தேர்வு

சிரோமணி அகாலி தளம் தலைவராக சுக்பீர் சிங் பாதல் அறிவிக்கப்பட்டுள்ளார். பிரகாஷ் சிங் பாதலுக்கு பிறகு அகாலி தளம் தலைவராக 2008-ல் பதவியேற்ற சுக்பீர் சிங் பாதல் கடந்தாண்டு வரை அப்பதவியில் இருந்தார். சீக்கிய மதத்தின் உயரிய அமைப்பான அகால் தத் அவருக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றியதால், கட்சித் தலைவர் பதவியை ராஜினாமா செய்தார். பின்னர் தற்போது மீண்டும் ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
Similar News
News September 19, 2025
வெறும் 40 பைசாவில் ₹10 லட்சம் இன்சூரன்ஸ்!

ரயிலில் பயணிக்கும்போது விபத்து ஏற்பட்டால் மருத்துவம் பார்க்க, ₹10 லட்சம் வரை காப்பீடு வழங்கப்படுகிறது. ஆன்லைனில் டிக்கெட் புக் செய்யும்போதே இந்த இன்சூரன்சுக்கான ஆப்ஷனை க்ளிக் செய்து, 40 பைசாவை கட்டினால் போதும். ரயில் விபத்தில் ஒருவர் இறந்தாலோ, உடல் முழுவதுமாக செயலிழந்தாலோ ₹10 லட்சம் வரை கிடைக்கும். பகுதியளவு செயலிழந்தால் ₹7.5 லட்சமும், காயம் ஏற்பட்டால் ₹2 லட்சமும் வழங்கப்படுகிறது. SHARE.
News September 19, 2025
₹36 கோடி வருமான வரி: ஜெ.தீபா வழக்கு தள்ளுபடி

ExCM ஜெயலலிதா செலுத்த வேண்டிய ₹36 கோடி வருமான வரி பாக்கியை செலுத்தக் கோரி, ஜெ.தீபாவுக்கு வருமான வரித் துறை நோட்டீஸ் அனுப்பி இருந்தது. இதை எதிர்த்து அவர் சென்னை ஐகோர்ட்டில் வழக்குத் தொடர்ந்தார். வழக்கின் விசாரணையில், வரித் தொகையை ₹13 கோடியாக குறைத்துவிட்டதாக வருமான வரித்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து இந்த வழக்கை ஐகோர்ட் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.
News September 19, 2025
விஜய்யின் பக்கம் காய் நகர்த்தும் டிடிவி தினகரன்

NDA-வில் இருந்து வெளியேறிய தினகரன், EPS-ஐ CM வேட்பாளராக ஏற்க முடியாது என கூறி வருகிறார். அதோடு, அமமுக வெற்றிக் கூட்டணியில் இணையும் எனவும் தெரிவித்திருந்தார். இந்நிலையில் விஜய்யுடன் டிடிவி தரப்பில் இருந்து பேச்சுவார்த்தை நடத்தப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. கூட்டணி குறித்து டிசம்பரில் அறிவிப்பேன் என கூறிய டிடிவி, பாஜகவுக்கு அழுத்த கொடுக்கவே விஜய் தரப்பிடம் பேச்சுவார்த்தை நடத்தியதாக கூறப்படுகிறது.