News November 20, 2024
பாக்.கில் தற்கொலைப்படை தாக்குதல்: 12 வீரர்கள் பலி
பாகிஸ்தானில் தீவிரவாதிகள் நடத்திய தற்கொலைப்படை தாக்குதலில் 12 ராணுவ வீரர்கள் பலியாகியுள்ளனர். கைபர் பக்துன்குவாவில் உள்ள சோதனை சாவடி மீது வெடிகுண்டுகள் ஏற்றப்பட்ட வாகனத்தை மோதி வெடிக்கச் செய்தனர். இதில் 12 ராணுவ வீரர்களும், தாக்குதல் நடத்திய தீவிரவாதியும் பலியாகினர். குவெட்டா ரயில் நிலைய தாக்குதலின் பதற்றம் தணிவதற்குள் இச்சம்பவம் நடந்துள்ளது. இதனால் பாகிஸ்தானில் பதற்றம் அதிகரித்துள்ளது.
Similar News
News November 20, 2024
BREAKING: தென் தமிழகத்திற்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை
தென் தமிழகத்தில் அதி கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. ஏற்கெனவே, தூத்துக்குடி, நெல்லை, தென்காசி, ராமநாதபுரம் உள்ளிட்ட மாவட்டங்களுக்கு சென்னை வானிலை மையம் ஆரஞ்சு அலர்ட் விடுத்திருந்தது. இந்நிலையில், இந்திய வானிலை மையம் அதனை அதி கனமழைக்கான ரெட் அலர்ட் ஆக மாற்றி அறிவித்துள்ளது. தென் தமிழகத்தில் நேற்று முதல் பல்வேறு இடங்களில் கனமழை பெய்து வருவது குறிப்பிடத்தக்கது.
News November 20, 2024
மகாராஷ்டிராவில் நடந்தது என்ன?
மகாராஷ்டிராவில் 2019-ல் நடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் BJP+ சிவசேனா கூட்டணி மெஜாரிட்டி பெற்றாலும், அதிகாரப் போட்டியால் ஆட்சியமைப்பதில் இழுபறி ஏற்பட, குடியரசுத் தலைவர் ஆட்சி அமலுக்கு வந்தது. பின் சரத்பவாரின் என்சிபி, காங்., சிவசேனா இணைந்து உத்தவ் தாக்கரேவை CM ஆக்கி கூட்டணி ஆட்சியமைத்தன. ஆனால், 2022-இல் சிவசேனா உடைய, ஏக்நாத் ஷிண்டேவின் சிவசேனா, பாஜகவுடன் இணைந்து ஆட்சி அமைத்தது.
News November 20, 2024
2 மாநிலங்களில் அடுத்து யார் ஆட்சி? WAY2NEWSஇல் EXIT POLL
மகாராஷ்டிரா, ஜார்க்கண்ட் மாநில சட்டப்பேரவைகளுக்கு இன்னும் சில நிமிடங்களில் வாக்குப்பதிவு நிறைவுபெறவுள்ளது. வாக்குப்பதிவு நிறைவடைந்தவுடன் வாக்காளர்களிடம் எடுக்கப்பட்ட வாக்குகள் குறித்த தகவலை வைத்து, யார் அங்கு அடுத்து ஆட்சியமைக்க வாய்ப்புள்ளது என்ற EXIT POLL விவரத்தை WAY2NEWS வெளியிடவுள்ளது. இதை தெரிந்து கொள்ள WAY2NEWSஇல் தொடர்ந்து இணைந்திருங்கள்.