News November 24, 2024
ஓடும் அரசு பேருந்தில் தூக்குப்போட்டு தற்கொலை

ஆந்திராவில் திருப்பதி மாவட்டம் ஏர்பேடு பகுதியில் அரசு பேருந்தில் ஒருவர் தற்கொலை செய்து கொண்டுள்ளார். 3 பயணிகள் மட்டுமே இருந்த பேருந்தில் ஏறி பின் சீட்டில் அமர்ந்தவர், சிறிது நேரத்தில் தான் கொண்டு வந்த கயிற்றால் ஓடும் பேருந்திலேயே தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதனைக் கண்ட நடத்துநர் போலீசில் புகார் அளித்தார். இறந்தவர் விவரம் மற்றும் தற்கொலைக்கான காரணம் இன்னும் தெரியவரவில்லை.
Similar News
News October 19, 2025
தள்ளாடும் இந்தியா!

மழைக்கு பிறகு போட்டி தொடங்கியவுடனே ஷ்ரேயஸ் ஐயர் 11 ரன்களில் அவுட்டாகி அதிர்ச்சி கொடுத்தார். இதனால், இந்திய அணி 45/4 என்ற நிலையில் தள்ளாடி வருகிறது. களத்தில் அக்சர் படேல் 10 ரன்களுடன் இருக்க, KL ராகுல் அடுத்த பேட்ஸ்மேனாக வந்துள்ளார். மழை காரணமாக, போட்டி தலா 35 ஓவர்களாக குறைக்கப்பட்டுள்ள நிலையில், இந்திய தள்ளாடி வருகிறது.
News October 19, 2025
படகு விபத்தில் பலியான 3 இந்தியர்கள், 5 பேர் மாயம்

மொசாம்பிக் நாட்டில் உள்ள பெய்ரா துறைமுக பகுதியில், ஊழியர்கள் சென்று கொண்டிருந்த படகு திடீரென கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில், 14 இந்தியர்கள் இருந்த நிலையில் 3 பேர் உயிரிழந்தனர். 5 பேர் காணாமல் போன நிலையில், அவர்களை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. விபத்தில் இருந்து மீட்கப்பட்ட இந்தியர்கள் பெய்ரா நகரில் உள்ள ஹாஸ்பிடலில் சிகிச்சை பெற்று வருவதாக தூதரக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
News October 19, 2025
மர்மமாகவே விளங்கும் பூமியின் ரகசியங்கள்!

அறிவியல் ரீதியாக இன்னும் தெளிவுபடுத்தப்படாத
ஆழமான மர்மங்கள் நிறைந்து காணப்படும் இடங்கள் உலகின் பல்வேறு பகுதிகளில் உள்ளன. அதில் பல இடங்கள் பற்றி எவ்வளவு ஆராய்ந்தாலும் விஞ்ஞானிகளுக்கே அது புரியாமலே உள்ளது. அப்படி, இன்னும் பதில் கிடைக்காத அந்த மர்ம இடங்கள் பற்றியும், அதன் பின்னணி பற்றியும் அறிய மேலே ஸ்வைப் பண்ணி பாருங்க…