News April 3, 2025
கரும்பு கொள்முதல் விலை ₹4,000ஆக உயர்வு: அமைச்சர்

கரும்பு கொள்முதல் விலை டன் ஒன்றுக்கு ₹4,000ஆக உயர்த்தி வழங்கப்படும் எனச் சட்டப்பேரவையில் அமைச்சர் MRK பன்னீர்செல்வம் அறிவித்துள்ளார். எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அவர், வரும் செப்டம்பர் மாதத்தில் இருந்து நெல் குவிண்டாலுக்கு ₹2,500ஆக வழங்கப்படும் என்றும் கூறினார். அரசின் இந்த அறிவிப்புக்கு விவசாயிகள் பலரும் வரவேற்பு தெரிவித்துள்ளனர். உங்கள் கருத்து என்ன?
Similar News
News April 5, 2025
காந்தி பொன்மொழிகள்

*தன்னிடம் உள்ள குறைகளை மறைப்பவனே குருடன். *பலவீனமானவன் எப்போதும் மன்னிக்க மாட்டான். மன்னிப்பது என்பது பலமுடையோரின் குணம். *மற்றவர்களைக் கெட்டவன் என்று சொல்வதால் நாம் நல்லவராகி விட முடியாது. *எல்லாவற்றிற்கும் அறம் தான் அடிப்படை, அந்த அறத்துக்கே உண்மை தான் அடிப்படை. *பிறரை அழிக்க நினைப்பவன், தன்னைத்தானே அழித்துக் கொள்கிறான். *அன்பு அச்சமில்லாதது, அன்புள்ள இடத்தில் தான் கடவுள் இருக்கிறான்.
News April 5, 2025
யூனுஸிடம் நேராக பாயிண்ட்டை பிடித்து பேசிய பிரதமர்

தாய்லாந்தில் நேற்று நடைபெற்ற பிம்ஸ்டெக் உச்சி மாநாட்டின் போது, வங்கதேச இடைக்கால அரசு தலைவர் முகமது யூனுஸை பிரதமர் மோடி சந்தித்து பேசினார். அப்போது வங்கதேசத்தில் ஹிந்துக்கள் உள்ளிட்ட சிறுபான்மையினருக்கு எதிரான தாக்குதல்கள் கவலை அளிப்பதாகவும், இது குறித்து விசாரணை நடத்தி நீதி வழங்கவும் பிரதமர் வலியுறுத்தினார். மேலும், எல்லை விவகாரம், இருநாட்டு உறவு சிக்கல் குறித்து இரு தலைவர்களும் விவாதித்தனர்.
News April 5, 2025
தினம் ஒரு திருக்குறள்

▶குறள் பால்: அறத்துப்பால் ▶குறள் இயல்: இல்லறவியல் ▶அதிகாரம்: ஈகை ▶குறள் எண்: 227 ▶குறள்: பாத்தூண் மரீஇ யவனைப் பசியென்னும் தீப்பிணி தீண்டல் அரிது.. ▶பொருள்: பகிர்ந்து உண்ணும் பழக்கம் உடையவர்களைப் பசியென்னும் கொடிய நோய் அணுகுவதில்லை.