News October 9, 2025
முதுகுவலியால் கஷ்டமா.. உதவும் சுப்த வஜ்ராசனம்!

✦முதுகெலும்பு நரம்புகள், தோள்கள் & முதுகை வலுப்படுத்த உதவும். ✦தோள்பட்டை வலியால் அவதிப்படுபவர்களுக்கு இந்த யோகா உதவும் ➥படத்தில் உள்ளது போல, காலை முட்டி போட்டு, முதுகை நேராக வைத்து படி உட்காரவும் ➥மெதுவாக மெல்ல பின்னோக்கி சாய்ந்து, தலை- கழுத்து- முதுகு தரையில் படும்படி(படத்தில் உள்ளபடி) படுக்கவும் ➥இந்த நிலையில் 15- 20 வினாடிகள் வரை இருந்துவிட்டு, பிறகு பழைய நிலைக்கு திரும்பவும். SHARE IT.
Similar News
News October 9, 2025
மகனை அடித்து துன்புறுத்தும் போலீஸ்: வேலூர் இப்ராஹிம்

தன் மகன் மீது பொய் வழக்கு போட்டு, போலீசார் அடித்து சித்ரவதை செய்வதாக பாஜக நிர்வாகி வேலூர் இப்ராஹிம் குற்றஞ்சாட்டியுள்ளார். தன்னை அடக்குவதற்கு தனது குடும்பத்தின் மீது தாக்குதல் நடத்துவதாகவும், குற்றத்தை ஒப்புக்கொள்ளச் சொல்லி தனது மகனை வற்புறுத்துவதாகவும் அவர் புகார் தெரிவித்துள்ளார். மேலும், தனது மகன் கஞ்சா வைத்திருந்ததை ஆதாரப்பூர்வமாக நிரூபித்தால் தண்டனையை அனுபவிக்கட்டும் என்றும் கூறியுள்ளார்.
News October 9, 2025
BREAKING: தங்கம் விலை வரலாறு காணாத மாற்றம்

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று(அக்.9) சவரனுக்கு ₹120 அதிகரித்துள்ளது. இதனால் வரலாறு காணாத புதிய உச்சமாக 22 கேரட் தங்கம் 1 கிராம் ₹11,400-க்கும், சவரன் ₹91,200-க்கும் விற்பனையாகிறது. தங்கத்தை பொறுத்தவரையில் கடந்த 9 நாள்களில் மட்டும் சவரனுக்கு ₹4,320 அதிகரித்துள்ளது. இது தொடர்பாக தங்க நகை வியாபாரிகளிடம் கேட்டபோது வரும் நாள்களிலும் விலை உயரும் என கூறியுள்ளனர்.
News October 9, 2025
இந்தியர்கள் வாழும் பகுதியை ‘SLUM’ என்ற பிரிட்டன் MP

பிரிட்டனில் இந்தியர்களும், பாகிஸ்தானியர்களும் அதிகம் வசிக்கும் ஹேண்ட்ஸ்வொர்த் பகுதியை, SLUM (சேரி) என அந்நாட்டு MP ராபர்ட் ஜென்ரிக் விமர்சித்தது சர்ச்சையாகியுள்ளது. ஒரு வெள்ளையரை கூட அங்கு காணவில்லை எனவும், தான் வாழ விரும்பும் நாடு இது அல்ல என்றும் அவர் கூறியுள்ளார். ஆனால், இது கலாச்சார பன்முகத்தன்மை மிக்க பகுதி எனவும், MP இனவெறியுடன் பேசுவதாகவும் பலரும் கண்டித்து வருகின்றனர்.