News September 27, 2025
திடீர்’னு பெட்ரோல் காலியா? Fuel@Call ஆப் யூஸ் பண்ணுங்க!

ஆள் அரவமே இல்லாத இடத்தில், திடீரென வண்டியில் பெட்ரோல் காலியாகி நிற்பதை விட கொடுமை வேறெதுவும் இல்லை எனலாம். வெறுப்பேற்றும் இந்த பிரச்னைக்கு இந்தியன் ஆயில் நிறுவனம் தீர்வளித்துள்ளது. அந்நிறுவனத்தின் ‘Fuel@Call’ என்ற ஆப்பின் மூலம், எங்கு இருந்து வேண்டுமானாலும் பெட்ரோல்/டீசல் ஆர்டர் செய்யலாம். உடனே, நேரில் கொண்டுவந்து டெலிவரி பண்ணிடுவாங்க. இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள்.
Similar News
News January 2, 2026
அரசியல் கட்சிகளுக்கு சவாலான 2026 புத்தாண்டு

மலர்ந்துள்ள புத்தாண்டு அரசியல் கட்சிகளுக்கு மிக முக்கியமானதாகும். ஏனெனில், சில மாதங்களில் சட்டமன்ற தேர்தல் நடக்கவுள்ளது. ஆட்சியை தக்க வைக்க DMK முனைப்பு காட்டுகிறது, மீண்டும் ஆட்சிக்கட்டில் ஏற ADMK முயற்சிக்கிறது. வாகை சூடும் வரலாறு திரும்பும் என TVK நம்புகிறது. NTK-வும் தீவிரமாக களமாடுகிறது. வெற்றி, தோல்வியை பொறுத்தே கட்சிகளின் எதிர்காலம் அமையும். எனவே 2026 அரசியல் கட்சிகளுக்கு சவாலான ஆண்டாகும்.
News January 2, 2026
ஏன் இதை ‘தேன் நகரம்’ என்று அழைக்கின்றனர் தெரியுமா?

பாரம்பரிய மற்றும் நவீன முறைகளில் தேன் உற்பத்திக்கு பெயர் பெற்ற, உத்தரபிரதேசத்தில் உள்ள மகாராஜ்கஞ்ச், ‘தேன் நகரம்’ என்று அழைக்கப்படுகிறது. இந்திய-நேபாள எல்லைக்கு அருகில் அமைந்துள்ள இந்த ஊர், பழத்தோட்டங்கள் மற்றும் மலர் தோட்டங்களுடன் தேனீக்களின் வளர்ச்சிக்கு மிகவும் உகந்ததாக உள்ளது. இங்கு உற்பத்தி செய்யப்படும் தேன் ஐரோப்பா, வளைகுடா மற்றும் தென்கிழக்கு ஆசியாவிற்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது.
News January 2, 2026
கொடை வள்ளல் எலான் மஸ்க்!

உலகின் நம்பர் 1 கோடீஸ்வரரான எலான் மஸ்க், மிகப்பெரிய கொடை வள்ளலாகவும் வாழ்ந்து வருகிறார். அவர் சுமார் ₹900 கோடி மதிப்பிலான டெஸ்லா நிறுவன பங்குகளை தொண்டு நிறுவனங்களுக்கு கொடுத்ததாக கூறப்படுகிறது. 2021-ல் $5.74 பில்லியன், 2022-ல் $1.95 பில்லியன், 2024-ல் $112 மில்லியன் மதிப்பிலான பங்குகளை வழங்கியிருக்கிறார். இத்தனை தானங்களுக்கு பிறகும், அவருடைய நிகர மதிப்பு $619 பில்லியன் ஆக உள்ளது.


