News May 26, 2024
தமிழகம் முழுவதும் ரேஷன் கடைகளில் திடீர் ஆய்வு

ரேஷன் கடைகளில், அட்டைதாரர்கள் வாங்காத பொருட்களை சில ஊழியர்கள் வெளியில் விற்பதாகவும், கிடங்குகளில் இருந்து ரேஷன் கடைகளுக்கு கொண்டு வரப்படும் பொருட்கள் எடை குறைவாக இருப்பதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது. எனவே இதனை தடுக்கும் பொருட்டு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை உயர் அதிகாரிகள் தமிழகம் முழுவதும் திடீர் ஆய்வு நடத்தினர். இதில், முறைகேடுகளில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது.
Similar News
News March 30, 2026
வெடிகுண்டு மிரட்டல் மன்னன் கைது!

நாடு முழுவதும் வெடிகுண்டு மிரட்டல் விடுத்துவந்த ஸ்ரீனிவாஸ் லூயிஸ் (47) என்பவரை போலீசார் மைசூரில் கைது செய்துள்ளனர். அவர் பள்ளிகள், ஐகோர்ட்கள் மற்றும் அரசுக் கட்டடங்களில் குண்டு வைத்துள்ளதாக கூறி 1,100-க்கும் மேற்பட்ட மிரட்டல் மின்னஞ்சல்களை அனுப்பியுள்ளார். அவர் வேலையில்லாத ஒரு முதுகலைப் பட்டதாரி என்றும், மனநலப் பிரச்சினைகளால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
News March 30, 2026
EB பில்லை குறைக்க AC-க்கான கூல் டிப்ஸ்

*AC-யை 24 டிகிரியில் இயக்கவும். இது EB பில்லை 6% வரை குறைக்கும் *AC-யின் இன்னர், அவுட்டர் யூனிட்களை சுத்தம் செய்யவும். 3 மாதங்களுக்கு ஒருமுறை சர்வீஸ் செய்யவும் *AC ரூமில் ஜன்னல், கதவுகள் சரியாக மூடப்பட்டுள்ளதா என செக் செய்து கொள்ளவும் *AC-யுடன் சீலிங் ஃபேனை குறைந்த ஸ்பீடில் பயன்படுத்தவும் *ரிமோட்டில் மட்டும் Off பண்ணாமல், மெயின் சுவிட்சையும் Off செய்யவும். SHARE IT.
News March 30, 2026
ரூபாய் மதிப்பு வரலாறு காணாத சரிவு.. இதுவே முதல்முறை

டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு வரலாறு காணாத அளவுக்கு சரிவை சந்தித்துள்ளது. மேற்காசிய போரால் கச்சா எண்ணெய் விலை உயர்வு காரணமாக ரூபாயின் மதிப்பு ₹95-ஆக வீழ்ச்சியடைந்துள்ளது. கச்சா எண்ணெய் விலை உயர்வு, பங்குச் சந்தையின் நிலையற்ற தன்மை உள்ளிட்ட காரணங்களால் இந்த சரிவு ஏற்பட்டுள்ளது. டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு தொடர்ந்து வீழ்ச்சியடைவதால் பெட்ரோல், டீசல் விலை உயரும் அபாயம் அதிகரித்துள்ளது.


