News March 17, 2024
சூப்பர் மார்க்கெட்டில் திடீர் தீ விபத்து!

நாவலூர் பகுதியில் ஓஎம்ஆர் சாலையில் உள்ள சூப்பர் மார்க்கெட்டில் இன்று காலை 8 மணி அளவில் திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது. தீ மளமளவென பரவியதால் அந்த பகுதி முழுவதும் கரும்புகை சூழ்ந்தது. தகவலறிந்து வந்த தீயணைப்புத் துறையினர் சுமார் அரை மணி நேரத்திற்கு மேலாக போராடி தீயை அணைத்தனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில் மின்கசிவால் தீ விபத்து ஏற்பட்டுள்ளது தெரிய வந்துள்ளது.
Similar News
News April 5, 2025
சென்னையில் அரசு வேலை; 8th பாஸ் போதும்

பெருநகர சென்னை மாநகராட்சி சுகாதார துறையில் 345 காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதற்கு 8th பாஸ் போதும். B.Ed, B.Sc, Diploma, ITI, M.Ed, M.Sc, MBBS, Nursing, PG Diploma படித்தவர்களும் விண்ணப்பிக்கலாம். தகுதிற்கேற்ப ரூ.18,500 முதல் சம்பளம் வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள் <
News April 5, 2025
புதிய மண்டலங்கள் உருவாக்கும் பணி நிறுத்தம்

சென்னையில் 15 ஆக உள்ள மண்டலங்களின் எண்ணிக்கையை 20 ஆக உயர்த்தி கடந்த மாதம் தமிழ்நாடு அரசு அறிவித்திருந்தது. ஆனால் இந்த அறிவிப்புக்கு கவுன்சிலர்கள், பொதுமக்கள் உள்ளிட்ட பலரும் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். சென்னை மாநகராட்சி கவுன்சிலர்களின் பதவி காலம் இன்னும் 2 ஆண்டுகள் உள்ளன. எனவே, புதிய மண்டலங்களை உருவாக்க முடியாது என்பதால் அதற்கான பணி தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்படுவதாக கூறப்பட்டுள்ளது.
News April 5, 2025
4 வயது குழந்தைக்கு பாலியல் தொல்லை

முகப்பேர் பகுதியில், 4 வயது குழந்தைக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குழந்தையின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில், போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், அருகிலுள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து வருகிறார்கள். குழந்தை பாதுகாப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதுடன், விரைவில் குற்றவாளி பிடிபடுவார் என உறுதியளித்தனர்.