News February 28, 2025

அரசு பஸ்களில் திடீர் கட்டணம் உயர்வு

image

அரசு பஸ் டிக்கெட் கட்டண உயர்த்தப்பட்டது குறித்து அறிவிப்பு வெளியாவது வழக்கம். ஆனால், அரசு போக்குவரத்து கழக மதுரை மண்டலத்தால் மதுரையில் இருந்து தூத்துக்குடி மார்க்கமாக திருச்செந்தூருக்கு இயக்கப்படும் பஸ்களில் சத்தமின்றி கட்டணம் உயர்த்தப்பட்டு இருப்பதாகக் கூறப்படுகிறது. திருச்செந்தூர்- மதுரைக்கு இடைப்பட்ட நிறுத்தங்களுக்கு ரூ.5 முதல் ரூ.9 வரை உயர்த்தப்பட்டு இருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

Similar News

News March 20, 2026

வரலாற்றில் இன்று

image

➤1854 – அமெரிக்காவின் குடியரசுக் கட்சி விஸ்கான்சின் ரிப்போன் நகரில் ஆரம்பிக்கப்பட்டது.
➤ 1948 – சிங்கப்பூரில் முதலாவது தேர்தல் நடைபெற்றது
➤1956 – பிரான்சிடம் இருந்து துனீசியா விடுதலை அடைந்தது.
➤1977 – தேர்தலில் இந்திரா காந்தி தோல்வியை தழுவினார்.
➤2020 – நிர்பயா வழக்கு குற்றவாளிகள் 4 பேருக்கும் தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டது.

News March 20, 2026

அதிமுக MP மீது விசாரணையை தொடங்கிய மகளிர் ஆணையம்

image

நடிகை நயன்தாரா குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசிய C.V.சண்முகம் மீது மாநில மகளிர் ஆணையம் தாமாக முன் வந்து விசாரணையை தொடங்கியுள்ளது. ஊடங்களில் வெளியான செய்தியின் அடிப்படையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலும் C.V.சண்முகம் MP என்பதால் நாடாளுமன்ற செயலரிடம் புகார் அளிக்கவும், அவர் மீது நடவடிக்கை எடுக்க DGP-க்கு பரிந்துரைக்கவும் மகளிர் ஆணையம் முடிவு செய்துள்ளது.

News March 20, 2026

அடுத்த ரேஸில் களமிறங்கும் அஜித்!

image

க்ரெவெண்டிக் 24H சீரிஸ் ஐரோப்பிய தொடரில் இன்று அஜித் பங்கேற்க உள்ளார். Ajith RedAnt Racing என்ற பெயரில் களமிறங்கும் அவரது அணியில், அவருடன் இணைந்து கோபி டி பிரூக்கர், அய்ர்டன், யானிக் ஆகியோர் ரேஸில் கலக்க உள்ளனர். இந்த ரேஸில் அஜித் Mercedes-AMG GT3 EVO ரக காரைப் பயன்படுத்த உள்ளாராம். துபாய் தொடரில் கோப்பையை வெல்ல தவறியதால், இதில் வெற்றிபெற்றே தீர வேண்டும் என்ற உத்வேகத்துடன் அவர் இருக்கிறாராம்.

error: Content is protected !!