News August 2, 2024
நெல்லை ஊரக வளர்ச்சி திட்ட இயக்குநர் திடீர் மாற்றம்

திருநெல்வேலி மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் சுரேஷ் திருச்சி மாவட்ட மாநில ஊரக வாழ்வாதார இயக்க திட்ட இயக்குநராக பணி மாறுதல் செய்யப்பட்டுள்ளார். இவருக்கு பதிலாக திண்டுக்கல் மாவட்ட மாநில ஊரக வாழ்வாதார இயக்க திட்ட இயக்குநர் சரவணன் நெல்லை மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநராக இடமாறுதல் செய்யப்பட்டுள்ளார். இதுபோல் தமிழகத்தில் 17 திட்ட இயக்குநர்கள் இடமாறுதல் செய்யப்பட்டுள்ளனர்.
Similar News
News September 12, 2025
நெல்லை: அமரர் ஊர்தி உரிமையாளர் விபத்தில் பலி

மூலைக்கரைப்பட்டி அருகே காரியாண்டியை சேர்ந்தவர் சின்னத்துரை. அமரர் உறுதி உரிமையாளரான இவர் கடந்த 4ம் தேதி மாலை பைக்கில் மூலைக் கரைப்பட்டியில் இருந்து வீட்டிற்கு வந்து கொண்டிருந்தார். கீழக்கோடங்குளம் அருகே வந்த போது திடீரென பைக் நிலை தடுமாறி சாலையில் விழுந்ததில் படுகாயம் அடைந்தார். பாளை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கபட்ட சின்னத்துரை நேற்று உயிரிழந்தார்.
News September 12, 2025
நெல்லை பயணிகளுக்கு புதிய வசதி

நெல்லையிலிருந்து அவசரப் பணிக்கு சென்னை செல்பவர்கள் தூத்துக்குடி விமான நிலையம் சென்று விமானத்தில் பறக்கின்றனர். நெல்லையில் இருந்து விமான நிலையம் 31 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. இதை இணைக்கும் நான்கு வழிச்சாலையில் தடையின்றி செல்வதற்கு வசதியாக பாளை அருகே வசவப்பபுரம், முறப்பநாடு, மங்களகிரி உள்ளிட்ட 5 பகுதிகளில் உயர்மட்ட மேம்பாலம் கட்டும் பணி தொடங்கப்பட்டுள்ளது.
News September 12, 2025
நெல்லை: 50% மானியத்தில் கிரைண்டர்!

நெல்லை மக்களே கிரைண்டர் வாங்க போறீங்களா?? அப்போ தமிழக அரசு 5000 மானியம் புடிங்க. தமிழக அரசு வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள பெண்கள், ஆதரவற்றோர், கைம்பெண்கள் மற்றும் கணவனால் கைவிடப்பட்ட பெண்கள் உங்க வயது 25க்கு மேல் இருக்க APPLY பண்ணலாம். வேண்டும். தென்காசி மாவட்ட சமூக நல அலுவரிடம் உங்கள் ஆவணங்களை சமர்பித்து விண்ணப்பியுங்க.. பெண்களுக்கு SHARE பண்ணி APPLY பண்ண சொல்லுங்க.