News April 11, 2025
அமித்ஷா மேடையில் திடீர் பேனர் மாற்றம்.. ஏன்?

சென்னையில் அமித்ஷாவின் செய்தியாளர்கள் சந்திப்பு நடைபெற இருந்த மேடையில் இருந்த பேனர் மாற்றப்பட்டது பேசுபொருளாகியுள்ளது. இன்று பாஜக கூட்டணி கட்சிகள் குறித்த அறிவிப்பு வெளியாகும் என, முதலில் தேசிய ஜனநாயகக் கூட்டணி என்ற பேனர் வைக்கப்பட்டிருந்தது. ஆனால், கூட்டணி கட்சி தலைவர்கள் பங்கேற்காததால், அந்த பேனர் மாற்றப்பட்டது. இருப்பினும் ஜி.கே.வாசன் அமித்ஷாவை சந்திக்க வருகை தந்துள்ளார்.
Similar News
News November 14, 2025
BREAKING: நாளை அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை

டெட் தேர்வு நடைபெறுவதையொட்டி, தமிழகம் முழுவதும் நாளை அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. வழக்கமாக சனிக்கிழமை விடுமுறை என்றாலும், சில வகுப்பு மாணவர்களுக்காக பள்ளிகள் செயல்படும். ஆனால், அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. டெட் தேர்வையொட்டி, புதுச்சேரியிலும் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
News November 14, 2025
VIRAL: ராகுல் காந்தியின் ‘95 தேர்தல் தோல்விகள்’

காங்கிரஸின் தோல்வியை கலாய்த்து பாஜக ஐடி விங் வெளியிட்ட X பதிவு வைரலாகி வருகிறது. காங்கிரஸில் முக்கிய தலைவராக ராகுல் உருவெடுத்த 2005 முதல் 2025 வரையான 20 ஆண்டுகளில், அக்கட்சியின் அனைத்து தேர்தல் தோல்விகள் & பின்னடைவுகளை குறிப்பிட்டு, ‘ராகுல் காந்தி! இன்னொரு தேர்தல், இன்னொரு தோல்வி!’ எனக் குறிப்பிட்டு, தேர்தலில் தோற்பதில் இவரது consistency-ஐ யாருமே மிஞ்ச முடியாது என்று கிண்டல் செய்துள்ளது.
News November 14, 2025
BIHAR ELECTION: தேஜ் பிரதாப் யாதவ் தோல்வி

பிஹார் சட்டப்பேரவை தேர்தலில், லாலு பிரசாத் யாதவின் மூத்த மகன் தேஜ் பிரதாப் யாதவ் தோல்வியடைந்தார். மஹுவா தொகுதியில் தனது ஜன்ஷக்தி ஜனதா தள கட்சியின் சார்பாக போட்டியிட்ட அவர், LJP(R) வேட்பாளர் சஞ்சய் குமாரிடம் 51,000 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்து 3-ம் இடம் பிடித்தார். ஆர்ஜேடி கட்சியின் முகேஷ் ரோஷன் இரண்டாம் இடம் பிடித்தார்.


