News October 20, 2025

இவ்வளவு பெரிய பூசணிக்காயா!

image

பூசணிக்காய் வளர்ப்பது என்பது சாதாரண வேலை அல்ல. அதிலும் பிரம்மாண்ட பூசணிக்காய்களை வளர்ப்பது பெரிய விஷயம். அப்படி வளர்க்கப்படும் பூசணிக்காய்களுக்கான உலக சாம்பியன்ஷிப் போட்டி கலிபோர்னியாவில் நடைபெற்றது. இதில், பிராண்டன் டாசன் என்ற பொறியாளர் வளர்த்த 1,064 கிலோ எடையுள்ள பூசணிக்காய் முதல் பரிசை தட்டி சென்றது. அவருக்கு சுமார் ₹17 லட்சம் பரிசுத்தொகையாக வழங்கப்பட்டது.

Similar News

News March 22, 2026

அந்த 2 மணி நேரம் மிக முக்கியம்.. இல்லன்னா கஷ்டம்

image

நீங்கள் சைபர் மோசடியில் பணத்தை இழக்க நேர்ந்தால் பதற்றமடைய வேண்டாம். உடனடியாக 1930 (அ) CyberCrime.gov.in என்ற இணையதளத்திலும் புகார் அளிக்கலாம். அப்போது மோசடியாளர்கள் செய்த பரிவர்த்தனையை பற்றி வங்கியிடம் கூறி உங்கள் கணக்கை முடக்க சொல்லுங்கள். மோசடி நடந்த 1-2 மணி நேரம் தான் மிக மிக முக்கியம். இந்த நேரத்திற்கு நீங்கள் புகாரளித்தால் பணத்தை மீட்பதற்கான வாய்ப்பு அதிகம். SHARE.

News March 22, 2026

SC/ST ஆணைய தலைவர் தமிழ்வாணன் காலமானார்

image

ஐகோர்ட் Ex நீதிபதியும், TN SC/ST ஆணைய தலைவருமான தமிழ்வாணன் உடல்நலக்குறைவால் காலமானார். ஐடி ஊழியர் கவினின் ஆணவப் படுகொலை உள்ளிட்ட பல வழக்குகளில் விசாரணை மேற்கொண்ட அவர், ஏழை எளிய மக்களுக்கு சட்ட ரீதியாக உதவி செய்து, அடித்தட்டு மக்களுக்கான நாயகனாக திகழ்ந்தவர். ஆணவப் படுகொலைக்கு எதிரான தனிச்சட்டம் அவசியம் என தொடர்ந்து வலியுறுத்திய அவரது மறைவுக்கு ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

News March 22, 2026

சற்றுமுன்: விலகுவதாக அறிவித்தார் சரத்குமார்

image

பாஜகவில் தனக்கு பொறுப்புகள் வழங்கப்படாதது குறித்த ஆதங்கத்தை சரத்குமார் கொட்டி தீர்த்துள்ளார். தானும், ராதிகாவும் தேர்தலில் போட்டியிடாமல் விலகுகிறோம்; தலைமை சொன்னால் கூட தேர்தலில் நிற்க மாட்டோம் என்று கூறியுள்ளார். அதேசமயம் தனது ஆதரவாளர்களுக்கு வாய்ப்பு தர வேண்டும் என்ற ஒரு பட்டியலை தேசிய தலைமைக்கு நாளை கடிதமாக கொடுக்க உள்ளதாகவும், தன் கோரிக்கைக்கு செவிசாய்த்தே ஆக வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!