News October 27, 2024
அடுத்தடுத்து விஜய் அட்வைஸ்: காரணம் இதுதான்!

தவெக முதல் மாநில மாநாட்டை முன்னிட்டு விக்கிரவாண்டியே குலுங்கி வருகிறது. ரசிகர்கள், பொதுமக்கள், தொண்டர்கள் என இப்போதே மாநாட்டு அரங்கம் நிரம்பி வழிகிறது. 8 லட்சம் பேர் வரை வரும் நிலையில், 50 ஆயிரம் இருக்கைகளே உள்ளன. இதனால் கூட்டம் கட்டுக்கடங்காமல் போகக்கூடும். இதன் காரணமாகவே, முதியவர்கள், சிறார்கள், உடல்நலம் குன்றியவர் மாநாட்டுக்கு வர வேண்டாம் என விஜய் அடுத்தடுத்து கூறி வருகிறார்.
Similar News
News January 15, 2026
துர்கா ஸ்டாலினுடன் ஜாய் கிரிசில்டா

பிரபல சமையல் கலைஞர் மாதம்பட்டி ரங்கராஜ் தான், தன் குழந்தையின் தந்தை என்பதை நிரூபிக்க கோர்ட் படியேறி ஜாய் கிரிசில்டா போராடி வருகிறார். முன்னதாக, CM ஸ்டாலினை அப்பா என குறிப்பிட்டு, எனக்கு நீதி பெற்றுத் தாருங்கள் எனக் கோரியிருந்தார். இந்நிலையில் CM ஸ்டாலினிடம் இருந்து இன்று ₹100 பொங்கல் படி பெற்றதாகவும், துர்கா அம்மாவை நேரில் சந்தித்து ஆசி பெற்றதாகவும் கூறி போட்டோக்களை வெளியிட்டுள்ளார்.
News January 15, 2026
சற்றுமுன்: ‘விஜய் உடன் பொங்கல்’

டெல்லியில் PM மோடி பங்கேற்ற பொங்கல் விழாவில் ‘பராசக்தி’ படக்குழுவினர் பங்கேற்றதை காங்., விமர்சித்து வருகிறது. இந்நிலையில், விஜய் ஒரு நடிகராக இருந்திருந்தால் அவரையும் இந்த விழாவிற்கு அழைத்திருப்போம் எனத் தமிழிசை கூறியுள்ளார். மேலும், ‘ஜன நாயகன்’ ரிலீஸாகும் போதே தங்களுக்கு பொங்கல் என விஜய் ரசிகர்கள் கூறிவிட்டதால், அப்போது அவர்களுடன் சேர்ந்து நாமும் பொங்கல் கொண்டாடுவோம் என தெரிவித்துள்ளார்.
News January 15, 2026
இன்ஸ்டாகிராமில் துப்பாக்கி விற்ற திமுக நிர்வாகி!

நெல்லையில் இன்ஸ்டாகிராம் மூலம் துப்பாக்கி விற்பனை செய்ததாக திமுக பொறியாளர் அணி நிர்வாகி ரத்தினம் பாலா உள்ளிட்ட மூவர் கைதானதை அதிமுக விமர்சித்துள்ளது. திமுக ஆட்சியில் கூலிப்படை, போதைப்பொருள் தாண்டி துப்பாக்கி நெட்வொர்க்கும் வளர்ந்துள்ளதாகவும், இச்செய்தியால் மக்கள் நிம்மதியாக நடமாட அச்சப்படுவதாகவும் குற்றஞ்சாட்டியுள்ளது. அதோடு கைதான ரத்தினம் பாலா DCM-உடன் இருக்கும் போட்டோவும் வைரலாகி வருகிறது.


