News April 18, 2025
அதிமுகவில் இருந்து அடுத்தடுத்து விலகல்

பாஜக உடன் திடீர் திருப்பமாக அதிமுக கூட்டணி அமைத்துள்ளது. இதனால், அக்கட்சியில் உள்ள இஸ்லாமியர்கள் கடும் அதிருப்தி அடைந்துள்ளனர். குறிப்பாக, முன்னாள் MLA உள்பட பலர் கட்சியில் இருந்து விலகினர். இந்நிலையில், இஸ்லாமியர்களை பழிவாங்கும் பாஜகவுடன் கூட்டணி அமைத்தற்காக, 53 ஆண்டுகள் கால கட்சிப் பணியில் இருந்து விலகுவதாக பக்கீர் மைதீன் என்பவர், அதிமுக தலைமைக்கு எழுதிய கடிதம் வைரலாகிறது.
Similar News
News November 22, 2025
215 பள்ளி மாணவர்கள் கடத்தல்: பெற்றோர் கண்ணீர்!

நைஜீரியாவில் கிறிஸ்தவ பள்ளி ஒன்றில் 215 மாணவர்கள் கடத்தப்பட்டுள்ளனர். அங்கு, கிறிஸ்தவர்களுக்கு எதிரான வன்முறை அதிகரித்து வரும் நிலையில், ஆயுதம் ஏந்திய கும்பல் பள்ளியை தாக்கி 12 ஆசிரியர்களையும் கடத்தி சென்றது. ஏற்கெனவே இந்த வார தொடக்கத்தில் மற்றொரு பள்ளியில் மாணவிகள் 25 பேர் கடத்தப்பட்டனர். ஒரே வாரத்தில் 2-வது கடத்தல் சம்பவம் நடைபெற்றுள்ள நிலையில், பெற்றோர்கள் பிள்ளைகளை காணாமல் கதறி வருகின்றனர்.
News November 22, 2025
விஜய் நிகழ்ச்சியில் 2000 பேருக்கு மட்டுமே அனுமதி

விஜய் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சி நாளை காலை 11 மணிக்கு காஞ்சிபுரம் ஜேப்பியார் கல்லூரி வளாகத்தில் நடைபெறும் என்று புஸ்ஸி ஆனந்த் அறிவித்துள்ளார். இதில், காஞ்சிபுரம் மாவட்டத்தை சேர்ந்த சிறு குறு விவசாயிகள், நெசவாளர்கள் உள்ளிட்டோர் பங்கேற்கவுள்ளனர். குறிப்பாக, QR குறியீட்டுடன் கூடிய நுழைவுச் சீட்டு வழங்கப்பட்டுள்ள 2000 பேருக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
News November 22, 2025
இந்த நாள்களில் ரேஷன் கடைகள் லீவு.. அரசு அறிவிப்பு

தமிழகம் முழுவதும் உள்ள ரேஷன் கடைகளுக்கு 2026-ம் ஆண்டிற்கான விடுமுறை பட்டியலை உணவுப்பொருள் வழங்கல் துறை வெளியிட்டுள்ளது. பொங்கல் பண்டிகை, தைப்பூசம், ரம்ஜான், பக்ரீத், மே தினம், மிலாடி நபி, விநாயகர் சதுர்த்தி, ஆயுத பூஜை தீபாவளி, கிறிஸ்துமஸ் உள்பட மொத்தம் 23 நாள்கள் விடுமுறையாகும். மேலும், ஜன.14-க்குள் குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசுப் பொருள்களை வழங்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.


