News June 27, 2024
வெற்றிக்கு தனி மனிதர்கள் காரணமில்லை: மார்க்ரம்

வெற்றிக்கு கேப்டன் மட்டுமே காரணமாக இருக்க முடியாது என தென்னாப்பிரிக்கா அணி கேப்டன் ஐடன் மார்க்ரம் கூறியுள்ளார். அணியின் வெற்றி எங்களின் குழு முயற்சிக்கு கிடைத்த பரிசு என்று தெரிவித்த அவர், இந்த வெற்றி அணியில் விளையாடியவர்கள் மற்றும் வெளியில் இருந்து உதவியவர்களையே சாரும் என்றார். இறுதிப் போட்டியில் மிக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவோம் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
Similar News
News December 11, 2025
விஜய்யின் ஆசைக்கு அளவில்லை: கோவி.செழியன்

தமிழக மக்களையே வென்றெடுக்க முடியாத விஜய், புதுச்சேரி மக்களை வென்றெடுப்பேன் என்பது வேடிக்கையாக உள்ளதாக அமைச்சர் கோவி.செழியன் தெரிவித்துள்ளார். விஜய்யின் பேச்சு, ‘கூரை ஏறி கோழி பிடிக்காதவர், வானத்தில் ஏறி வைகுண்டத்தை காட்டுவேன்’ என்பது போன்று இருந்ததாகவும் அவர் விமர்சித்தார். மேலும், ஆசைக்கு அளவில்லை என்பதற்கு அடையாளம் நடிகர் விஜய் தான் என்றும் அவர் குறிப்பிட்டார்.
News December 11, 2025
Ro-Ko கான்ட்ராக்டை மாற்றுகிறதா BCCI?

Ro-Ko ஆகியோரின் சம்பள ஒப்பந்தத்தில் விரைவில் மாற்றம் வரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இருவரும் தற்போது A+ பிரிவில் (ஆண்டுக்கு ₹7 கோடி) உள்ளனர். ஆனால், இந்தியாவுக்காக 3 வகை கிரிக்கெட்டிலும் விளையாடுபவருக்கே இந்த ஒப்பந்தம் வழங்கப்பட்டு வருகிறது. எனவே, வரும் 22-ம் தேதி BCCI-ன் வருடாந்தர பொதுக்குழு கூட்டத்தில், இவர்களின் கான்ட்ராக்ட் மாற்றம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகலாம்.
News December 11, 2025
BREAKING: தங்கம் விலை தடாலடியாக மாறியுள்ளது

ஆபரணத் தங்கத்தின் விலை இன்றும் அதிகரித்துள்ளதால், நகை பிரியர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ₹160 உயர்ந்து ₹96,400-க்கும், கிராமுக்கு ₹20 உயர்ந்து ₹12,050-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. குறிப்பாக, நேற்று ₹240, இன்று ₹160 என 2 நாளில் மொத்தம் சவரனுக்கு ₹400 உயர்ந்துள்ளது.


