News February 10, 2025

அடுத்தடுத்த குமுறல்கள்.. இபிஎஸ் அவசர ஆலோசனை

image

அதிமுக Ex அமைச்சர்கள் அடுத்தடுத்து தங்களது அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ள நிலையில், இபிஎஸ் அவசர ஆலோசனைக் கூட்டம் நடத்தியுள்ளார். S.P.வேலுமணி, தங்கமணி ஆகியோருடன் நடத்திய ஆலோசனையின் போது செங்கோட்டையன், கோகுல இந்திராவை அழைத்துப் பேச இபிஎஸ் முடிவு செய்துள்ளதாக தெரிகிறது. அன்னூரில் நடந்த பாராட்டு விழாவை விவசாயிகள் நடத்தினார்கள், அதற்கும் அதிமுகவுக்கும் தொடர்பில்லை என ஜெயக்குமார் கூறியிருந்தார்.

Similar News

News March 3, 2026

சங்கீதா விவாகரத்தில் ட்விஸ்ட்.. மொத்தமாக மாறுகிறது

image

விஜய் – சங்கீதா விவாகரத்து செய்தி தமிழகத்தின் ஹாட் டாபிக்காக மாறியுள்ளது. சங்கீதாவுடன் விஜய் தரப்பு சமரசப் பேச்சு நடத்தி வருவதாக இன்று தகவல்கள் வெளியாகி இருந்தன. இந்நிலையில், விஜய்யின் சமரசத்தை ஏற்று சங்கீதாவும் விவாகரத்து மனுவை வாபஸ் பெற வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. ஆனால், இதுதொடர்பாக இருதரப்பினரிடம் இருந்தும் எந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பும் தற்போதுவரை வெளியாகவில்லை.

News March 3, 2026

இன்று சந்திர கிரகணம்: தம்பதியர் ஒன்று சேரலாமா!

image

சந்திர கிரகணத்துக்கு முன்பு 9 மணிநேரமும், கிரகணத்தின் போதும் பூமியின் சூழல் அசுத்தமாவதாக இந்துமத நம்பிக்கை கூறுகிறது. இந்நேரத்தில் பல்வேறு விஷயங்களில் ஈடுபடுவதை தவிர்க்கும்படி அறிவுறுத்தப்படுகிறது. அவ்வகையில், தம்பதியர் உறவில் ஈடுபடுவதையும் கிரகணம் முடியும்வரை தவிர்க்க வேண்டும் என்று கூறப்படுகிறது. ஆனால், உறவில் ஈடுபடுவதால் எந்த பாதிப்பும் ஏற்படாது என டாக்டர்கள் கூறுகின்றனர்.

News March 3, 2026

காங்கிரஸ் கட்சியில் பிளவா? 13 MLA-க்கள் போர்க்கொடி

image

40 தொகுதிகளை காங்கிரஸ் கேட்கும் நிலையில் திமுகவோ 29 தொகுதிகளை கொடுக்க மட்டுமே ஆர்வம் காட்டுகிறது. இதனிடையே தவெகவுடன் காங்கிரஸ் நிர்வாகிகள் ஹைதராபாத்தில் வைத்து பேச்சு வார்த்தை நடத்தியதாகவும் கூறப்படுகிறது. தவெகவுடன் காங்., பேச்சுவார்த்தை நடத்துவதை அறிந்து, 13 MLA-க்கள் போர்க்கொடி தூக்கியுள்ளனர். தவெகவுடன் கூட்டணி அமைத்தால் கட்சியில் இருந்து விலகுவோம் என எச்சரித்துள்ளனர்.

error: Content is protected !!