News April 19, 2025
சுபம் – தேதி குறிச்ச சமந்தா!

பெரிய இடைவேளைக்கு பிறகு, சமந்தா மீண்டும் திரைத்துறையில் பிஸியாகி இருக்கிறார். ட்ரலாலா மூவிங் பிக்சர்ஸ் என்ற பெயரில் புதிய தயாரிப்பு நிறுவனம் தொடங்கி, ‘சுபம்’ என்ற படத்தையும் தயாரித்து இருக்கிறார். இந்த படம் அடுத்த மாதம் 9-ம் தேதி வெளிவர இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. புது முகங்கள் நடித்துள்ள இப்படத்தை பிரவீன் காந்த்ரேகுலா என்பவர் இயக்கி இருக்கிறார்.
Similar News
News December 14, 2025
வரலாற்றில் இன்று

*1812 – ரஷ்யா மீதான பிரெஞ்சுப் படையெடுப்பு முடிவுக்கு வந்தது.
*1799 – அமெரிக்க முன்னாள் அதிபர் ஜார்ஜ் வாஷிங்டன் மறைந்த நாள்.
*1959 – தமிழறிஞர் சோமசுந்தர பாரதியார் மறைந்தநாள்.
*1965 – இயக்குநர் வசந்த் பிறந்த தினம்.
*1984 – நடிகர் ராணா டகுபதி பிறந்தநாள்.
News December 14, 2025
‘பராசக்தி’ படம் ரிலீஸில் மாற்றமா?

சிவகார்த்திகேயனின் ‘பராசக்தி’ படம் பொங்கலையொட்டி ஜன.14-ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டது. ஆனால் அன்று தெலுங்கில் பெரிய ஹீரோக்களின் 3 படங்கள் வெளியாக இருப்பதால், ஆந்திராவில் பராசக்திக்கு தியேட்டர்கள் கிடைக்காது என கூறப்படுகிறது. இதனால் விஜய்யின் ‘ஜனநாயகன்’ வெளியாகும் ஜன 9-ம் தேதி, SK-வின் படமும் வெளியாக வாய்ப்புள்ளதாக சினிமா வட்டாரங்களில் பேசப்படுகிறது.
News December 14, 2025
ஒரே முள்ளங்கியில் இத்தனை நன்மைகளா?

பலரும் சாப்பாட்டில் ஒதுக்கி வைக்கும் முள்ளங்கியில் ஓராயிரம் நன்மைகள் இருப்பதாக டாக்டர்கள் கூறுகின்றனர். *முள்ளங்கியில் ரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்தும் ரசாயனம் உள்ளதாம். *நீரிழிவு நோய் உருவாவதைத் தடுக்க உதவும் ஆக்சிஜனேற்ற ஆற்றலும் இருக்கிறதாம். * கல்லீரல் சேதத்தில் இருந்து பாதுகாக்கும் கலவைகளும் உண்டாம். கேன்சரை ஏற்படுத்தும் மரபணு மாற்றங்களிலிருந்து உடலில் உள்ள செல்களை பாதுகாக்குமாம். Share it


