News August 2, 2024
சென்னை எழிலகத்தில் முதல்வர் ஸ்டாலின் ஆய்வு

சென்னை எழிலகத்தில் உள்ள மாநில பேரிடர் கட்டுப்பாட்டு மையத்தில் முதல்வர் ஸ்டாலின் நேரில் ஆய்வு மேற்கொண்டார். 24 மணி நேர கட்டுப்பாட்டு அறைக்கு சென்ற அவர், நீலகிரி, கோவை மாவட்டங்களில் பெய்து வரும் மழை நிலவரங்களை கேட்டறிந்தார். அதேபோல, மேட்டூர் அணையிலிருந்து அதிக நீர் திறக்கப்படுவதால், காவிரி கரையோர மாவட்டங்களில் செய்துள்ள முன்னேற்பாடுகள் குறித்தும் அதிகாரிகளுடன் அவர் ஆலோசனை நடத்தினார்.
Similar News
News November 20, 2025
சற்றுமுன்: விடுமுறை… நாளை முதல் 3 நாள்கள் அரசு அறிவிப்பு

வார விடுமுறையையொட்டி நாளை முதல் நவ.23 வரை சிறப்பு பஸ்கள் இயக்கப்படும் என அரசு அறிவித்துள்ளது. சென்னை,கோவை, திருச்சி உள்ளிட்ட முக்கிய நகரங்களில் இருந்து மக்கள் சிரமமின்றி ஊருக்குச் செல்ல கூடுதல் பஸ்கள் இயக்கப்பட உள்ளன. இதுவரை சுமார் 5,000-க்கும் மேற்பட்டோர் டிக்கெட் முன்பதிவு செய்துள்ளனர். www.tnstc.in இணையதளம், மொபைல் ஆப் மூலம் டிக்கெட் முன்பதிவு செய்யலாம். நீங்க டிக்கெட் புக் பண்ணிட்டீங்களா?
News November 20, 2025
டெல்லி குண்டுவெடிப்பு.. மேலும் 4 பேர் கைது

டெல்லி குண்டுவெடிப்பு தொடர்பாக மேலும் 4 பேரை NIA கைது செய்துள்ளது. இதில், 3 பேர் டாக்டர்கள் ஆவர். கைது செய்யப்பட்ட 4 பேரும் டெல்லி கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில், அவர்களை 10 நாள்கள் காவலில் எடுத்து விசாரிக்க NIA-வுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கில் இதுவரை 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். நவ.10-ல் நடந்த தற்கொலைப்படை தாக்குதலில் 15 பேர் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.
News November 20, 2025
காதலை எந்த மொழியில் எப்படி சொல்கிறார்கள்?

‘நான் உன்னை காதலிக்கிறேன்’ என்பதை ஒவ்வொரு மொழியிலும் எப்படி சொல்கிறார்கள் என்று தெரியுமா? பெரும்பாலும் ஆங்கிலத்தில் ‘ஐ லவ் யூ’ என்றுதான் பலரும் சொல்கின்றனர். ஆனால், இந்தியாவில் பேசப்படும் மொழிகளில், காதலை எப்படி வெளிப்படுத்துகிறார்கள் என்று, மேலே போட்டோக்களில் பகிர்ந்துள்ளோம். அவற்றை ஒவ்வொன்றாக ஸ்வைப் செய்து பாருங்க. SHARE.


