News March 5, 2025
மாணவர்களே நீங்க படிங்க.. அரசு நாங்க பாத்துக்கிறோம்..

தமிழகத்தில் ப்ளஸ் 2 பொதுத்தேர்வு நேற்று முன் தினம் தொடங்கிய நிலையில், ப்ளஸ் 1 தேர்வு இன்று தொடங்குகிறது. அதேபோல், வரும் 28ஆம் தேதி தொடங்கும் 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு, ஏப்ரல் 15 வரை நடைபெற உள்ளது. இக்காலகட்டங்களில் அதிகாலை, மாலை, இரவு என மாணவர்கள் எந்த வேளையிலும் படித்திட ஏதுவாக, தேர்வு நாள்களில் தடையின்றி மின்சாரம் வழங்க மின்சாரத்துறைக்கு தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
Similar News
News October 29, 2025
பைசனுக்காக ஆளே மாறிப்போன நடிகை அனுபமா!

பைசன் படம், அனுபமா பரமேஸ்வரனுக்கு தமிழ் சினிமாவில் புதிய அடையாளத்தை கொடுத்துள்ளது. தனக்கு மக்கள் மனதில் நிற்கும் கதாபாத்திரத்தை கொடுத்த இயக்குநருக்கு ஏற்கெனவே அனுபமா நன்றி தெரிவித்திருந்தார். இதனிடையே பைசன் ஷூட்டிங்கில் எடுக்கப்பட்ட போட்டோஸை இன்ஸ்டாவில் அவர் பகிர்ந்துள்ளார். இதற்கு, கதையோடு ஒன்றி உறவாடிய அவரின் அர்ப்பணிப்பு போட்டோக்களில் வெளிப்படுவதாக ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகிறனர்.
News October 29, 2025
உலக சந்தையில் தங்கம் விலை மீண்டும் குறைந்தது

உலக சந்தையில் கடந்த 17-ம் தேதி புதிய உச்சமாக $4,379-க்கு விற்பனையாக 1 அவுன்ஸ் தங்கம் இன்று $3,942 ஆக குறைந்துள்ளது. சர்வதேச சந்தையில் ஏற்பட்டுள்ள விலை குறைப்பின் தாக்கத்தால் இந்திய சந்தையில் கடந்த 10 நாள்களில் மட்டும் சவரனுக்கு ₹10,000 குறைந்துள்ளது. குறிப்பாக, USA சந்தையில் தற்போதைய நிலவரப்படி $63 குறைந்துள்ளது. அதனால், நம்மூரிலும் இன்று தங்கம் விலை கணிசமாக குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
News October 29, 2025
PAK-AFG அமைதி பேச்சுவார்த்தை தோல்வி

பாக்.,-ஆப்கன் இடையேயான போரை நிறுத்த பல்வேறு முயற்சிகள் நடைபெற்று வருகின்றன. அதன் ஒரு பகுதியாக இஸ்தான்புல்லில் அமைதி பேச்சுவார்த்தை நடைபெற்று வந்தது. இந்நிலையில், பேச்சுவார்த்தையில் எந்த ஒரு தீர்வும் எட்டப்படவில்லை என்று, பாக்., அமைச்சர் அட்டாவுல்லா தரார் தெரிவித்துள்ளார். இந்த போரில், இதுவரை 37 பொதுமக்கள் மற்றும் இருதரப்பை சேர்ந்த வீரர்கள் சுமார் 500 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.


