News April 8, 2025
பவன் கல்யாணால் தேர்வை மிஸ் செய்த மாணவர்கள்

பவன் கல்யாணின் கான்வே செல்வதற்காக சாலைகள் மூடப்பட்டதால் ஜேஇஇ முதன்மை தேர்வுக்கு சரியான நேரத்தில் செல்ல முடியவில்லை 30 மாணவர்கள் குற்றம்சாட்டியுள்ளனர். தங்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகியுள்ளதாக மாணவர்கள் கண்ணீர் மல்க தெரிவித்துள்ளனர். போக்குவரத்து நிறுத்தத்திற்கும் மாணவர்கள் சரியான நேரத்துக்கு செல்லாததற்கும் தொடர்பில்லை என காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Similar News
News April 8, 2025
BREAKING: தீ விபத்தில் பவன் கல்யாணின் மகன் காயம்!

சிங்கப்பூரில் ஏற்பட்ட தீ விபத்தில் AP Dy CM பவன் கல்யாணின் மகன் மார்க் சங்கர் காயமடைந்தார். பள்ளியில் நடந்த இந்த விபத்தில் அவரது கைகள், கால்களில் காயங்களுடன் ஹாஸ்பிடலில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அதிகாரிகள் பவன் கல்யாணை உடனடியாக சிங்கப்பூர் செல்ல அறிவுறுத்தியும், பழங்குடி மக்களுக்கு உறுதியளித்தபடி இன்று குரிடி கிராமத்திற்கு சென்றுவிட்டு பின்னர் சிங்கப்பூர் செல்வதாக அவர் பதில் அளித்துள்ளார்.
News April 8, 2025
நேற்று கருப்பு பேட்ஜ்.. இன்று கருப்புச் சட்டை!

சட்டப்பேரவைக்கு கருப்பு சட்டை அணிந்தபடி அதிமுகவினர் இன்று வந்தனர். டாஸ்மாக்கில் நடந்த ஊழலை கண்டித்தும், யார் அந்த தியாகி என கேள்வி எழுப்பியும் நேற்று கருப்பு பேட்ஜ் அணிந்து அதிமுகவினர் பேரவைக்கு சென்றிருந்தனர். அப்போது பதாகைகளை ஏந்தி பேரவைக்குள் அமளியில் ஈடுபட்டதால், இபிஎஸ் உள்ளிட்ட அதிமுகவினர் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். 2வது நாளாக இன்று கருப்புச் சட்டை அணிந்தபடி பேரவைக்கு வருகை புரிந்துள்ளனர்.
News April 8, 2025
Health Tips: மாதவிடாய் சுழற்சியை சீராக்கும் பப்பாளி

பெண்களுக்கு மாதவிடாய் நெருங்கிவரும் நாட்களில், பப்பாளி சாப்பிட்டால் உடனே மாதவிடாய் வர வாய்ப்புள்ளது. இதற்கு சூடு மட்டுமே காரணமல்ல. பழமாகாத பப்பாளியில் இருக்கும் papain, carpaine என்ற சத்துகள், கருப்பை சுருங்கி கரு முட்டைகள் உடைய தூண்டலாம் என டாக்டர்கள் கூறுகின்றனர். இதிலுள்ள, வைட்டமின் சி, பீட்டா- கரோட்டின் போன்றவை ஹார்மோன் உற்பத்தியை தூண்டி மாதவிடாய் சுழற்சியை சீராக வைக்க உதவுகிறது. SHARE IT.